பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம் எனும் புதிர் | 邻 90 நானும் அங்கே போகனும் அம்மா. அதிலேயிருந்து நான் உன்னைப் பார்ப்பேன். நானும் அதிலே உட்கார்ந்து போகனும் என்றான். திரும்ப திரும்பச் சொன்னான், சிணுங்கினான். ராகம் இழுத்தான். பெரிய குரலில் அழத் தொடங்கினான். அப்புறம் நிறுத்தவேயில்லை. பார்வதி எவ்வளவோ சொன்னாள். கைலாசமும் சொன்னான். அவன் ஆசையை மாற்றுவதற்காக மிட்டாயும் பலூனும் பொம்மையும் வாங்கிக் கொடுத்தார்கள். ஊஹஅம். பிரயோசனமில்லை. நான் அதிலே போகணும். அங்கேயிருந்து பார்க்கணும் என்று ஒரே விஷயத்தை வைத்துத் தொண தொணத்துக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை பிறகு தெரிந்தது தானே! ஏச்சு, பேச்சு, உதை! முளைத்து மூணு இலை குத்தலே. அதுக்குள்ளே இவ்வளவு அகம்பாவமா? ஒகோ, எங்கே இதெல்லாம்: என்ற ரீதியில் வீராப்புப் பேச்சுக்கள். வைராக்கிய உறுமல்கள். கோட இடிகள்! எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு அந்தக் குழந்தை விம்மியது, ஏங்கியது. பிறகு தானாகவே தனது ஆசையை மறந்துவிட்டது. ஒரு சமயம் அவர்கள் ரயில் வண்டியில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். திடீரென்று குழந்தையின் உள்ளத்தில் ஏனோ ஒரு சலனம். நம்ம வீட்டுக்குப் போகணும் என்று ஓலமிடத் தொடங்கிவிட்டது. கிளம்பிய இடத்துக்கே திரும்பிப் போக வேண்டும் என்று அழுது முரண்டு பண்ணிய குழந்தையை அடக்க இயலாமல் திணறினாள் தாய். நீடித்த தொல்லையைப் பொறுக்க முடியாத தந்தை அதன் முதுகில் வெளும்பக் கொடுத்தார். அடிபட்டு அழுது அழுது சோர்ந்து தூங்கிவிட்டது குழந்தை விழித்து எழுந்த பிறகு அந்த நினைப்பு இருந்த நிழல் கூட இல்லை! ஜன்னலுக்கு வெளியே பார்த்து, ஒடும் ரயிலுக்குப் பாய்ச்சல் காட்டுவது போல் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் காட்சிகளில் வேடிக்கை காண்பதில் ஈடுபட்டு விட்டது. சிரித்துக் களித்தது.