பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4

முன் முயற்சிகளும்..

முதற்கட்ட முன்வைப்புகளும்...

நாட்டில் எழுந்த கொந்தளிப்புகளை சமாளிக்கும் விதமாக படித்த நடுத்தர வர்க்கத்தினர், மற்றும் படித்த உயர்சாதியினரின் பார்வையை தம் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் நோக்கில் இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள லண்டனிலிருந்த இந்திய செயலர் ஜான் மார்லி விரும்பினார். 1892ம் ஆண்டு சட்டத்தினால் மாகாண சட்ட சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த பிரதிநிதிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தி, ஸ்தல ஆட்சியில் அவ்வர்க்கங்களை பயன்படுத்த அவர் எண்ணினார். இந்த யோசனை வைஸ்ராய் மிண்டோவிற்கு ஏற்றதாக இருக்க இருவருமே அதற்கான வேலைகளில் இறங்கினர். மிண்டோவிற்கும் மார்லிக்கும் இடையே கடிதப் போக்குவரத்து நடந்தது. 1906 ஆம் ஆண்டு 15ம் நாள் மார்லி, மிண்டோவிற்கு எழுதிய கடிதத்தில்

'லண்டன் கவுன்சிலைப்போல உம்முடைய சட்டசபையில் உள்ளூர் புள்ளிகளை ஏன் அதிகரிக்கக் கூடாது. திருத்தங்களை கொண்டு வரவும், தேவைக்கும் குறைவாக நான்கு அல்லது ஐந்து மணி நேரம் விவாதம் நடத்தாமல் வரவு-செலவு விவாதத்தை முழு நேரமாக நடத்தினால் என்ன?... இத்தருணத்தில் சீர்திருத்தத்தை தொடங்கினால் என்ன?...'

என்று தம் ஆலோசனையை சொல்லி அதற்கான பதிலை எதிர் பார்த்தார். இப்படி சில கடிதப் பரிமாற்றங்களுக்குப் பிறகு 1906 ஆகஸ்டில் மிண்டோ பிரபு ஏடி அருண்டேல் தலைமையில் இ என் பேக்கர், ஏர்ல் ரிச்சர்ட்ஸ், மற்றும் மென்சில் இப்பெட்சன் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்து நான்கு நோக்கங்களை அதன் முன் வைத்தார். அதில் மார்லி சொன்ன ஆலோசனைகளே இருந்தன, இந்த குழு ஆய்வு செய்து, 1906 அக்டோபர் 12ல் தனது அறிக்கையை சமர்பித்தது.

மிண்டோ - மார்லி சொன்ன ஆலோசனைகளையும் சேர்த்து நிலச்சுவான்தாரர்களுக்கும், சிறுபான்மையினரான முஸ்லீம்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்

கௌதம சன்னா / 28