பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருந்தது. இந்த அறிக்கையை 1907 மார்ச் மாதத்தில் வைஸ்ராய் செயற்குழு பரிசீலித்த பிறகு லண்டனிலுள்ள இந்திய செயலர் மார்லி பிரபுவுக்கு அனுப்பியது. அறிக்கையைப் பெற்ற மார்லி பிரபு நில உடைமையாளர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்ற ஆலோசனையை ஏற்றுக் கொண்டார்.

சீர்திருத்த நடவடிக்கைகள் தொடங்கியவுடன் அனைத்து சமூக மக்களிடையே ஆர்வம் அதிகமாகியது. குறிப்பாக படித்த உயர்சாதியினரிடம் வேகம் அதிகரித்தது. காங்கிரஸ் தொடர்ச்சியாக இந்தியர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரியது. அதன் நடைமுறைவாதிகளின் தலைவரான கோகலே தொடர்ந்து கடிதங்களை மார்லிக்கும் - மிண்டோவிற்கும் எழுதினார். மார்லி கோகலேவுக்கு கொடுத்த உறுதியின் அடிப்படையில் மார்லியை கோகலே புகழ்ந்து எழுதியதோடு, அவர்களுக்கு எதிரான அபிப்ராயங்கள் பத்திரிக்கைகளில் வருவதைக் கூட எதிர்த்தார். அதை தடுக்கவும் முனைந்தார். முஸ்லீம்களும் தம்பங்கிற்கு பிரிட்டிஷ் அரசின்மீது தீவிரமான விசுவாசத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த விசுவாச போட்டியில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை பேசுவதற்கு காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இரண்டுமே தயாராய் இல்லை.

இப்படியான, நெருக்கடியான தருணத்தில் தான் 1907, ஜூன் மாதம் 17ம் நாள் " ஒரு பைசா தமிழன் " என்ற இதழை சென்னை சின்னதறிப் பேட்டை எனும் சிந்தாதிரிப்பேட்டை ஆதி மூலம் அச்சியந்திர சாலையில் அச்சிட்டு தொடங்கினார் பண்டிதர். முதல் இதழிலேயே அரச வந்தனம் இடம் பெற்றது. அரசியல் என்ற தலைப்பில் அரசு கோலாட்சிக்குரிய இலங்கணங்களை விளக்கியதோடு பிரிட்டிஷ் ஆட்சி நீடுழி வாழ வாழ்த்தினார். அதுவுமின்றி ஜூன் 26, 1907 இரண்டாம் இதழில் "சுதேச சீர்திருத்தம் என்ற தொடர் கட்டுரையை பண்டிதர் எழுதத் தொடங்கினார். சுதேசி என்று பேசும் உயர்சாதியினரின் வேஷம் என கடுமையாக சாடி, அந்த இயக்கத்தை அம்பலப்படுத்த தொடங்கினார். சுதேச சீர்திருத்தம் என்பது பணமும், படிப்பும் உள்ள உயர்சாதியினர் பதவிகளில் அமர்ந்து கொள்வதல்ல அதேசமயம், ஒடுக்கப்பட்ட மக்களை சீர்துக்கி, கை தூக்கி விடுவதே சுதேச சீர்திருத்தம் என்று எழுதியதோடு

"ஆடுகள் கசாயிகாரனை நம்பி பின் செல்வது போல் தங்கள் சுயப்பிரயோஜனங்களுக்காய் நம்மையும், நமது தேசத்தையும் கெடுத்துவரும் சத்ருக்களைப் பின்பற்றுவோமானால், தற்காலம் நாமடைந்திருக்கும் கிஞ்சுத்துவ சுகமும் கெட்டு சீரழிவது

29 / பண்டிதரின்.... சமூகநீதிக் கொள்கை