பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


திண்ணம்." - என எழுதினார்.

இப்படி சுதேசி போராட்டக்காரர்களை, குறிப்பாக காங்கிரசாரை எதிர்த்து எழுதப்பட்ட இக்கட்டுரை 1908 அக்டோபர் 28 வரை தொடர்ந்து தொடராக வெளிவந்தது. ஒவ்வொரு வாரமும் நடந்த சுதேசியர்களின் முக்கிய நடவடிக்கைகளை கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதினார்.

இந்நிலையில் அருண்டேல் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப் படாததால் பல்வேறு விவாதங்கள் பத்திரிக்கைகளில் நடந்து வந்தன. அதுவுமின்றி ஒவ்வொரு வகுப்பும் கோரிக்கை மனுக்களை பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பிக் கொண்டிருந்தன. எனவே பண்டிதர் தலைமையிலான திராவிட மகாஜன சபை 1908ம் ஆண்டு தொடக்கத்தில் கூடி நடந்து கொண்டிருக்கும் போக்கை விவாதித்து தம்முடைய கோரிக்கைகளை மனுவாக கவர்னருக்கு அளிக்க முடிவு செய்தது. மனுவை பண்டிதர் தயார் செய்தார். அதில்,

மாகாண சட்ட சபைகளில் இக்குலத்தாரைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு யுரேஷியரையோ அல்லது ஐரோப்பியரையோ நியமனம் செய்ய வேண்டும்.

அரசுப் பணிகளில் இக்குலத்தோரை நியமனம் செய்து இடுக் கண்களைக் களைய வேண்டும். (1:222)

என்ற முக்கிய கோரிக்கைகளோடு இன்னும் சில கோரிக்கைகளையும் அதில் கேட்டிருந்தார். மாகாண சட்ட சபைகளில் தாழ்த்தப் பட்டோருக்கு பேச யுரேஷியரை அல்லது ஐரோப்பியரை கேட்டதற்கு காரணம் அப்போது பேசப்பட்டு வந்த தேர்தல் முறைதான். ஏனெனில் அறிமுகப் படுத்தப் படவிருக்கும் தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கு வாக்குரிமை கிடைக்காது என்பது பேச்சாயிருந்த படியாலும், அது சொத்துள் ளவர்களுக்கே உள்ள உரிமை என்றும் பேச்சாயிருந்தது. அப்படியின்றி நியமனம் மூலமாக நியமிப்பதானால் இக்குலத்தை சேர்ந்தவர்களையே நியமிக்க வேண்டும்" என்றும் பண்டிதர் மனுவில் கேட்டுக் கொண்டார்.

இப்படி தயாரிக்கப்பட்ட மனுவில், அரசு அலுவலக ஊழியர்கள், கம்பெனியின் ரயில்வே இல்லம், தலைமை அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட இன ஊழியர்கள், மற்றும் இவ்வினத்தில் உள்ள கனதன வியாபாரிகள், காண்ட்ராக்டர்கள், பட்டதாரர்கள், அரண் மனை அலுவலர்கள், என பணிபுரிந்த 2173 தலித்துகளிடம் கையொப்பம்

கெளதம சன்னா / 30