பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆச்சியின் தோல்வி & 102 அதை வெற்றிகரமாகக் காப்பாற்றத் தவறவில்லை ஆவு ஆச்சி. அவளது சாமி ஆட்டம் நடிப்பு என்பது வேறு யாருக்குமே தெரியாத விதத்தில் திறமையாக அவள் செயல் புரிந்தாள். சாமி வருவதையும், மலை ஏறுவதை'யும் தொடர்ந்து கவிகிற மயக்க நிலையையும் அற்புதமாகக் கையாண்டாள் ஆச்சி. வீட்டுக்கு வீடு இவை முற்றின. பலரது கவனிப்பும் போற்றுதலும், பக்தி பண்ணுதலும், உபசரித்தலும் அளவில் பெருகின. ஆச்சியின் வாழ்க்கைப் பாதையிலே வெற்றிக்கு மேல் வெற்றி கிட்டியது. அவள் வாய் திறந்து சொன்ன குறிகள் பலவும் பலித்துவிட்டதாகப் பலர் பேசி வந்தார்கள். இதுமாதிரி யாருக்குமே சாமி வந்து நாங்க பார்த்தது இல்லை அம்மா. ஆவு ஆச்சிக்கு தெய்வகிருபை பூரணமாக அமைஞ்சிருக்கு என்ற பேச்சு எங்கும் பரவியிருந்தது. ஆச்சிசுடச் சில சமயங்களில், தான் தெய்வாம்சம் பெற்றவள் என்று நம்பினாள்! ‘எங்க வீட்டுப் பூசையிலே சாமி வந்துதே, அதுமாதிரி ஆச்சிக்கு எப்பவுமே வரலே' நீதான் நினைக்கணும் அப்படி மேலத் தெரு பிறப்பாயி அத்தை வீட்டு படையலிலே ஆச்சிக்கு சாமி வந்துதே-அதை நீ பார்க்கலே போலிருக்கு! அதெல்லாம் என்ன மாமாயிச் சின்னம்மை வீட்டிலே மகனுக்குக் கலியாணம் நடக்கிறதுக்கு முந்தி, தெய்வத்துக்குப் படைச்சோமே. அப்ப நம்ம ஆச்சிக்கு சாமி வந்துதே, அதைப் போல வேறு எங்குமே வந்து நான் பார்த்தது கிடையாது.' இவ்விதம் அந்த வட்டாரத்தினர் பேசிக் களித்தார்கள். இதை எல்லாம் அறியும்போது, ஆவு ஆச்சி மனசினுள் சிரித்துக்கொள்வாள். வரட்டும் வரட்டும்! எல்லோருமே மூர்ச்சை போட்டு விழும்படியாக செய்கிறேன். சாகிற