பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 & வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் பண்ணல் என்கிற பல பெயர்களில் எல்லா வீடுகளிலும் ஒரே நிகழ்ச்சி நடைபெறுவது உண்டு. பொங்கலிட்டுப் பாயசம் சமைத்து, பல ரகக்கறி வகைகளும் ஆக்கி, புதுச் சேலை வேட்டி படைத்துத் தீபாராதனை செய்வார்கள். அது போன்ற சந்தர்ப்பங்களில் அபூர்வமாகச் சில பேருக்குச் ‘சாமி வரும் கண்களை உருட்டி உருட்டி விழித்துக் கொண்டு, தலைமயிரைப் பறக்கவிட்டபடி, தலையை ஆட்டி ஆட்டி ஆடி, அறையும் குறையுமாகப் புரியும்படி ஏதாவது சொல்லும் சாமி, திடீரென்று வந்ததுபோல் போய்விடும். உடனே சாமி ஆடிய அம்மாள் கட்டைபோல் நீட்டி நிமிர்ந்துவிடுவாள். இதனால் ஏற்படுகிற பரபரப்பும், ஆர்ப்பாட்டங்களும், சாமி வந்து ஆடிய ஆசாமியை மற்றவர்கள் கவனிக்கிற கவனிப்புகளும்-அடா அடா அடா! புகழ் விரும்பிகளுக்குப் பொறாமையை உண்டாக்கிவிடும் என்பதில் ஐயமில்லை. இந்த ரகமான புகழ் ஆவு ஆச்சிக்கு வந்து சேர்ந்திருந்தது. அது மட்டுமா? வளர்ந்தும் வந்தது. முதலில் 'சாமி உண்மையாக வந்ததா சாம்பிராணிப் புகை, பொங்கல் வகையறாக்களின் வாசனை சூழ்நிலைப் பரபரப்பு எல்லாம் சேர்ந்து உண்டாக்கிய மயக்கமா; அல்லது ஆச்சி எண்ணி எண்ணித் திட்டமிட்டதனால் திடீரென வெடித்த தற்செயல் நிகழ்ச்சியா என்பது ஆவு ஆச்சியாலேயே முடிவு கட்டப்படாத விஷயம் அவள் அண்ணாச்சி வீட்டில் தெய்வத்துக்குப் படைத்தபோதுதான், ஆவு ஆச்சிக்கு 'சாமி வந்தது. அவள் ஏதோ குறி சொன்னாள், அங்கு ஏற்பட்ட கவனிப்பும், அவள் உண்டாக்கிவிட்ட பரபரப்பும் ஆச்சிக்கு உற்சாகம் அளித்தன. பெருமையாகவும் இருந்தது. அன்று அவள் ஒரு தீர்மானம் செய்துகொண்டாள். இனி எங்கே தெய்வத்துக்குப் படைத்தாலும் சரி, தனக்குச் சாமி கண்டிப்பாக வந்தே தீரும்! இதுதான் அவள் செய்துகொண்ட விதி.