பக்கம்:மானிட உடல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூச்சுறுப்பு மண்டலம் 57 முன் தொண்டை மூக்கிலிருந்து மூச்சுறுப்பு வழிகள் கீழ்நோக்கி நேர் கோணத்தில் திரும்பி முன் தொண்டையாகிறது : நாம் வாயைத் திறக்கும்பொழுது இந்த முன் தொண்டையைக் காணலாம். இந்த முன் தொண்டை வழியாகக் காற்றும் உணவும் கீழ்நோக்கிச் செல்ல வேண்டி யிருப்பதால் அது தோலுடன் ஒப்பிடக் கூடிய உறுதியான சவ்வில்ை போர்த்தப் பெற்றிருக்கிறது. அது மூக்கிலுள்ள சவ்வைவிட உறுதி யானது என்றே சொல்ல வேண்டும். நுட்பமான பிசிர்கள் நாம் விழுங்கும் கடினமான உணவு உராய்வதால் தப்பிப் பிழைக்க முடியாது. கீழ்நோக்கி நீளும் முன் தொண்டை காற்று செல்லு வதற்குக் குரல்வளையாகவும் உணவு செல்லுவதற்கு உணவுப் பாதையாகவும் பிரிகின்றது. (புகைப்படம் எ-யும் புகைப் படம் கo-யும் பார்க்க.) குரல்வளையின் நுழைவாயில் குரல் வளே மூடி எனப்படும் குருக்தெலும்பு மூடியால் பாதுகாக்கப் பெற்றுள்ளது. (படம்-19.) పులి థర(} விழுங்கும்பொழுது குரல்வளை மேலெழுந்து சுருங்குகிறது ; இதல்ை உணவோ ப்ானமோ நுரையீரலினுள் செல்லாதவாறு தடுக்கப்பெறு கின்றது. குரல்வளை குரலின் பிறப்பிடமாகிய குரல்வளே கழுத்தின் முன்புறம் ஊறுபடக் கூடிய இடத்தில் அமைந்துள்ளது ; ஆனல் அது குரல்வளை மணி" என வழங்கும் புரிசைக் குருத்தெலும்புக் கவசத்தால் பாதுகாக்கப் பெற்றுள்ளது ; ஆடவர்களின் குரல்வளை எடுப்பாகவும் கூர்மையாகவும் இருக்கும் அத னுடைய வடிவம் ஒரளவு குசல் கனத்தை நிர்ணயிக்கிறது. குரல் வளையினுள் அதன் குழியில் குரல் நாண்கள் ஆங்கில எழுத்தாகிய v போல் உச்சி முன்னேக்கி யிருக்கு மாறு விரிந்து நீளுகின்றன. அவை குரல்வளையின் பக்கங்

  • Adam's apple.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/65&oldid=866488" இலிருந்து மீள்விக்கப்பட்டது