விரித்துப் பொருள் உரைத்து விளக்கி எழுதப்பட்ட கட்டுரைகளும் நூல்களுமே வெகுகாலம் ഖ്ങു് இலக்கியம் என்ற சிறப்புப் பெயரையும் தகுதியையும் பெற்றிருந்தன.
நாவல்களும், சிறு கதைகளும், சிந்தனைக் கட்டுரைகளும் இலக்கியத் தகுதி பெற முடியும்-அவையும் இலக்கிய அந்தஸ்து பெறக் கூடியவை, பெற வேண்டியவை என்ற நிலை தமிழ் நாட்டில் வெகு காலத்துக்குப் பின்னரே ஏற்பட்டது.
1930 களின் ஆரம்பத்திலும், அதற்கு முன்னரும் இலக்கியப் பத்திரிகைகள் என வெளிவந்தவை سنة இப்படிப்பட்ட விஷயங்களையே பிரசுரித்துக் கொண்டு இருந்தன. ஆனந்த போதினி, செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி ஆகிய பத்திரிகைகள் தமிழ் இலக்கியப் பிரியர் களிடமும், கவுரவமும் கல்வித்தரமும் உடைய வாசகர் களிடமும் ஆதரவு பெற்றிருந்தன.
நாவல்களை, பகுதி பகுதியாக, மாதப் பத்திரிகைகளில் தொடர்ந்து பிரசுரிக்கும் முயற்சிகளும் இருபதுகள். முப்பதுகள் காலகட்டத்திலேயே நடை முறையில் காணப்பட்டன.
வடுவூர் துரைசாமி அய்யங்கார் நாவலின் பகுதிகளை வெளியிடுவதற்காகவே மனோரஞ்சிதம்' என்ற மாதப் பத்திரிகை நடத்தப்பட்டது.
ஆனந்தபோதினி' இதர கட்டுரைகள், கதைகளுடன் ஆரணி குப்புசாமி முதலியாரின் நாவல்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தது.
இ வாசகர்களும் விமர்சகர்களும் 9