பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்கள் பரவலாக எங்கும் எட்டக்கூடிய வசதிகள் இருத்ததுமில்லை. எனவே, வாசிப்பவர் குறைவாகவும் கேட்பவர்கள் அதிகமாகவும் இருந்தார்கள்.

ஆயினும், சுவாரஸ்யமான கதைப்புத்தகங்கள் நாடு தெடுகிலும் பரவலாக அறிந்து கொள்ளப்பட்டிருந்த தாகவே தோன்றியது. ஆயிரம் தலை வாங்கிய அதிசய சித்தாமணி தமிழ் அறியும் பெருமாள் போன்ற புத்தகங்கள் நகரங்களிலும் கிராமங்களிலும் அறிமுகமாகி யிருந்தன. அவற்றின் கதைகளை சுவைபடக் கூறக்கூடிய ரசிகர்களும் அங்கங்கே இருந்தார்கள்.

வேறு விதமான புத்தகங்கள் வாசகர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்ததில்லையா? இச்சந்தேகம் இயல்பாக யாருக்கும் எழக் கூடும்.

திரு. வி, கல்யாணசுந்தரனார், ரா. பி. சேதுப்பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்கள் எழுதிய நூல்கள் ஒரு சாராரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. மறைமலை அடிகள் தனித்தமிழ் நடையில் எழுதி வழங்கிய நூல்களை விரும்பிப் படிக்கக் கூடிய வாசகர்களும் நாட்டில் இருந்தார்கள்.

இத்தகைய தமிழ் அறிஞர்களின் நூல்களே "இலக்கியங்கள்’ என்ற மதிப்பைப் பெற்றிருந்தன அந்தக் காலத்திலே.

போதுவாக, கம்ப ராமாயணம், திருக்குறள், சங்க காலப் பாடல்கள், பழம் செய்யுள்கள் ஆகியவற்றை

இ வாசகர்களும் விமர்சகர்களும் 8