ஆதரவைப் பெறுவதற்கு வேண்டிய உத்திகள் பலவற்றையும் அந்தப் பத்திரிகையின் அதிபரான எஸ். எஸ். வாசன் கையாண்டார். காலத்துக்குத் தக்கபடி இவ் உத்தி முறைகளை மாற்றி, வெற்றிகரமாகப் பத்திரிகையை வளரச் செய்தார்.
ஒவ்வொரு பிரதியிலும் தனித்தனி எண் அச்சிட்டு, அவற்றில் சில அதிர்ஷ்ட எண்கள்’ எனத் தேர்வு செய்யப்பட்டு, குறிப்பிட்ட எண்கள் உள்ள பிரதிகளை அடைகிற வாசகர்களுக்குப் பரிசுகள் வழங்குவது; 'பகுத்தறிவுப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டி’ என்று விதம் விதமான போட்டிகள் வைத்து, பெரும் தொகை பரிசு அளிப்பது; முக்கிய நகரங்களில், ஏஜண்டுகளின் உதவியோடு, பத்திரிகைப் பிரதிகளை இலவசமாக வழங்கி வாசகர்களுக்கு அதன் மீது ஒரு ருசி ஏற்படுத்துவது இப்படிப் பல.
மேலும், பத்திரிகையின் தோற்றத்திலும், அட்டைப் படத்திலும் அழகும் வசீகரமும் சேர்க்கும் முயற்சியும் கால வேகத்தோடு சிரத்தையுடன் மேற்கொள்ளப்பட்டது.
"கல்கி’ என்ற புனைபெயர் கொண்டிருந்த ரா. கிருஷ்ணமூர்த்தி 'ஆனந்த விகடன்' ஆசிரியராக அமைந்தது அந்தப் பத்திரிகைக்குக் கிடைத்த நல்வாய்ப்பு ஆகும். அதே போல, ஆனந்த விகடன்’ பத்திரிகையும், அதன் அதிபர் எஸ். எஸ். வாசன் ஆதரவும் கல்கி" ரா. கிருஷ்ணமூர்த்திக்குக் கிட்டியது அவரது தற்பேறு ஆகும்.
வாசகர்களும் விமர்சகர்களும் 1 7