பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


'கல்கி யால் 'ஆனந்த விகடனும், விகடனால் கல்கியும் பயனும் இலாபமும் பெற முடிந்தது. விகடனின் வளர்ச்சிக்கும், கல்கியின் எழுத்தாற்றல், புகழ் வளர்ச்சிக்கும் காலம் வெகுவாகத் துணைப் புரிந்தது.

தனது திறமையாலும் உழைப்பினாலும், தமிழ் நாட்டில் பத்திரிகை படிப்பவர்களின் எண்ணிக்கை பெரும்

அளவில் அதிகரிப்பதற்கு, கல்கி உதவினார்.

கல்கியின் எழுத்தாற்றல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இயல்பான நகைச்சுவை அவருக்குக் கைவந்த கலையாக இருந்தது. எந்த விஷயத்தையும் அரசியல், பொருளாதாரம், சங்கீத விஷயம், நாட்டு நடப்பு முதலிய சகல விஷயங்களையும் எளிய நடையில், நகைச் சுவையோடு, சுவாரஸ்யமாக எழுதும் திறமையை அவர் பெற்றிருந்தார். வாசகர்கள் விரும்பிப் படிக்கும் விதத்தில் சுவையான கதைகளை அவர் எழுதினார். அவர்களை வசீகரித்து, இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் வகையில் 'தொடர்கதை எழுதும் சாமர்த்தியமும் அவரிடம் இருந்தது.

விளக்கக் கட்டுரைகள் போலவும், அ ர சி ய ல் பிரச்னைகளுக்கு வழிகாட்டுவது போலவும் கல்கி"

விகடனில் தலையங்கம் எழுதினார்.

'பத்திரிகையில் தலையங்கம் என்பது படிக்க வேண்டாத பகுதி. ஆனால் விகடனில் கல்கி எழுதுகிற தலையங்கம் படிக்காமல் தீராத பகுதி' என்று கல்கியின்

எழுத்துத் திறமையைப் பாராட்டி, ர சி க ம ணி

இ வாசகர்களும் விமர்சகர்களும் 18