உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@ சிவமயம் அணிந்துரை சமய உலகிலும் சாத்திர உலகிலும் ஈடு இணை இன்றி ஆட்சி செய்யும் பிள்ளையாரைப் பற்றிக் கற்றோரேயன்றி மற்றோரும் படித்து எளிதில் புரிந்து கொள்ளும் முறையில் ஒரு சிறு நூல் எழுதி வெளியிடவேண்டுமென்பது என் நெடுநாளைய எண்ணம். இந்த எண்ணந்தான் இன்று இந்த நூலை உருவாக்கி இருக்கிறது. இந்நூலை ஆக்கித்தந்த திரு.தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் இதனை நல்ல பாகுபாடுகள் செய்து பிள்ளையாரின் பல வடிவங்கள், பிறப்பு, நோன்பு, வழிபாட்டின் பயன் முதலியவற்றைத் தெளிவாக உரைத்திருக்கிறார்கள். பிள்ளையாரைப்பற்றி வழங்கும் கதைகளையும், இலக்கியங்களில் இவ்ர் இடம் பெற்றுள்ளதையும் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்கள். பிள்ளையாரின் பிறப்பைப் பற்றி அவதாரம்'என்ற தலைப்பில் ஆசிரியர் சொல்லும் விளக்கம் அறிந்து உணரத் தக்கதாகும். பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் சந்நிதியில் மேற்கொள்ளும் சதுர்த்தி விரத மகிமையை எல்லோரும் உணர வேண்டுமென்பது என் அவா. இதிலும் பெண்கள் இந்த விரதம் மேற்கொண்டு அவர்கள் விரும்பும் பிள்ளைப்பேறு முதலிய எல்லா நலன்களும் பெறுவது விளக்கமாகவே கூறப்பட்டிருக்கிறது நூலில் என் மகள் திருதிறை செல்வி மீனாட்சிக்கு இவ்வாண்டு சதுர்த்திக்குள் ஆண் மகவு பிறக்க வேண்டும் என்று நான் பிள்ளையாரை நித்தமும் வழிபட்டு வந்தேன். என் மகளும் இந்த வருஷம் விரதம் மேற்கொண்டிருந்தாள். நான் பிரார்த்தித்தபடி, விரத பூர்த்தி செய்யும் இவ்வாண்டு ஆவணி சுக்லபக்ஷ சதுர்த்திக்குள் என் மகள் ஆண் மகவை பெற்றெடுத்தாள். இது கற்பக விநாயகர் வழிபாட்டின் பயன்தான் என நான் உறுதியாக நம்புகிறேன். பிள்ளையார் வழிபாட்டின் மணிமகுடமாய் விளங்கும் இச்சதுர்த்தி விரதத்தைப் பிள்ளையார்பட்டியில் செட்டிநாட்டுப் பெண்கள் 300 முதல் 500 பேர்வரை ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு நாளைக்கு 24 மணி என்பதுபோல ஒர் ஆண்டுக்கு 24 சதுர்த்திகள் உண்டு. உடலோடு, உள்ளக் கட்டுப்பாட்டையும் ஒரு வரையறையையும் நல்குவது இந்நோன்பு.