உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாராயணன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாராயணன் : (தலை குனிந்து கொண்டு) ஆம்.

ஆசிரியர் : என்ன ஆச்சரியம் இது! நான் உன்னை மிகவும் நல்லவன் என்று அல்லவோ நினைத்திருந்தேன்!இருக்கட்டும்- நீ ஏன் அவ்விதம் செய்தாய்?

நாராயணன் : நான் கல்லெறிந் தால் தவறாது பழத்தின்மேல் படுமா என்று முயன்று பார்த்தேன்.

ஆசிரியர்: நன்று - நன்று இது நல்ல முயற்சி. ஆசிரியர் உத்தரவில்லாமல் அவ்வாறு செய்யலாமா?

நாராயணன்: நான் செய்தது தப் பிதந்தான்:ஐயா, சிறிதும் எண்ணிப் பார்க்காமல் நான் இந்தச் செயலைச் செய்து விட்டேன்.

ஆசிரியர் அப்போது சிறிது நேரம் ஏதோ எண்ணத்தில் ஆழ்ந்து இருந்தார். நாராயணன் மிகவும் நல்லவன் என்பது அவருக்குத் தெரியும்.மிகவும் நல்ல பிள்ளைகள் கூட சில சமயங்களில் பிழை செய்து விடுகிறார்கள் அல்லவா! நாராயணனும் அவ்விதம்

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/18&oldid=1339754" இலிருந்து மீள்விக்கப்பட்டது