இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பிள்ளைகளே நான் அந்த நாணயத்தைக் கண்டதும்-ஆ ! என்ன சந்தோஷம் அடைந்தேன்! நான அதைக் கையில் வைத்து மூடிக்கொண்டு கூத்தாடினேன்; உயரத்தில் போட்டுப் போட்டுப் பிடித்தேன்; கல்லின் மேல் போட்டுத் தட்டிப் பார்த்தேன்; கையில் வைத்துக் கொண்டு அழகு பாா்த்தேன்; கண்களில் ஒற்றிக்கொண்டேன். அதற்கு நான் முத்தமும் பல கொடுத்தேன்.
பிறகு எனக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று. அது என்னவென்றால் என் பொன் நாணயத்தை எவரேனும் பார்த்துவிட்டனரோ என்பதே. ஆதலால், நான் அப்போதே அச்சத்தோடு நான்கு பக்கமும் சுற்றிப் பார்த்தேன்.
என் நல்ல காலம்! அப்போது அங்கே
11