இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அவா் என்னைக் கண்டதும், ‘அடே குப்பா, எங்கே அந்தப் பொன் நாணயம் ? கொண்டுவா - இங்கே’, என்று கேட்பார் என நான் எண்ணினேன். அப்போது நான், ‘எசமானரே, என்னை மன்னிக்கவேண்டும். இதோ அந்தப் பொன் நாணயம்,’ என்று சொல்லிக் கொடுத்துவிடத் தயாராய் இருந்தேன்.
பிள்ளைகளே, நான் அவர் அருகே சென்றேன். அவர் என்னைக் கண்டதும், ‘அடே குப்பா, கூழ் குடித்தனையா ?’ என்றார்.
நான் உடனே, ‘இன்னும் இல்லை’ என்று அச்சத்தோடு கூறினேன்.
‘அடே முட்டாளே, இவ்வளவு நேரமாகியும் நீ என்ன செய்கின்றாய்?
17