இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வில்லை. அவர்களோடு கூடி இருக்கவும் நான் விரும்பவில்லை. எனக்கு அங்கே உள்ள எல்லோர் மீதும் சந்தேகம் தோன்றிற்று. என்னைப் பார்க்கின்றவர்கள் எல்லோரும் என் பொன் நாணயத்தைப் பார்த்துவிட்டார்கள் என்றே நான் எண்ணினேன். ஆதலால், சாப்பாடு முடிந்ததும் நான் தனியே சிறிது தூரம் நடந்து சென்றேன்.
என் வேலை முடிந்ததும், அங்கு உள்ள சிறுவர்களோடு சிறிது நேரம் சந்தோஷமாகப் பேசிக்கொண்டு இருப்பேன்; அல்லது அவர்கள் விளையாடுவதை வேடிக்கையாகப் பார்ப்பேன். ஆனால், நான் அன்று அவ்விதம் செய்ய எண்ணவில்லை. நான் தனிமையாகவே இருக்க விரும்பினேன். அப்போது என் மனத்தில் ஒருவித
19