உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிவஞானம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு !} |

ஈசா ! இப்படுபாவி என்னைக் காலை நான்கு மணிக் கெல்லாம் வண்டியில் கட்டிவிட்டான் ; அன்று மாலை ஆறுமணிவரையில் என்னை வாட்டி வதைத் தான். அன்றைத் தினத்திலிருந்து இரவும் . லும் ஒன்ருகவே யிருந்தன. வெயிலும் மழையும் என் தலையிலேயே காயும், பேயும். இவன் பணப் பேய்பிடித்த பெரும் பாதகன் ; எங்குச் செல்வதாய் இருப்பினும் என்னைக் கட்டி யடிப்பான் ; இவன் பணம் என்ருல் பத்துக் காதமும் போவான் ; பகலென்றும் பாரான்-இரவென்றும் எண்ணுன் , என்னை இரையருந்தவும் விடான் ; இளைப்பாறவும் விடான் ; பொருள் சம்பாதிப்பதிலேயே கண்ணுங் கருத்துமாய் இருப்பான். இவன்; அப்பாதகப் பந்தயக்காரனையும் பரம யோக்கியனுக்கி விட்டான். அவனே, ஒரு நாளைக்கு என் உயிரை வாட்டி)ை லும், மற்றைய நாட்களில் என்னை இன்புறச் செய் வான். இச்சண்டாளனிடமோ எனக்கு என்றும் துன்பம் - என்றும் துன்பம் ; உயிர் போகும் வரை யில் ஒரே துன்பம். இவன் அவ்வஞ்சக வேலை யாளனையும் வென்று விட்டான். அவனே ஆகாரம் கொடாவிடினும் அல்லல் புரியான். இப்பாதக. னிடம் நான் வந்தபின்னரோ என் வயிற்றிற்கும் இரை யில்லை ; வேலையிலும் குறைவில்லை. இக் கொடியவன் ஒவ்வொருநாளும் இரவு எட்டு மணி வரையில் உயிரை வாட்டி விடுவான். சில சமயங் களில் நான் வீட்டிற்குத் திரும்ப மணி பத்தும் ஆகும் ; பன்னிரண்டும் அடிக்கும். இவ்வாறெல் லாம் இப்படுபாவி என்னை ஆட்டிப் படைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/38&oldid=563070" இலிருந்து மீள்விக்கப்பட்டது