40 கித்திலக் கட்டுரைகள் அவனுடைய தேவைகளும் பெருகியுள்ளன. வாழ்க்கை முறைகளும் மாறியுள்ளன அவற்றிற்கு ஏற்ப_இக் காலத்தில் புதுப் புதுக் கருவிகளும் வசதிகளும் ஏற் பட்ட வண்ணமாக உள்ளன. பழமையைப் போற்றி இவ்வசதிகளை வெறுத்தல் கூடாது. எனவே, இக்காலத்தில் ஏற்பட்டுள்ள எல்லா விதமான வசதிகளையும் நாம் பயன்படுத்த வேண்டும். நம்முடைய அறிவால் இன்னும் பற்பல வசதிகளையும் கண்டறியப் பாடுபடவும் வேண்டும். அதுவே இயற்கை நெறி. 'உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்.” என்ற வள்ளுவர் வாய்மொழியை உங்கட்கு நினைவூட்ட விரும்புகின்றேன். புதுமையைப் போற்றும் அதே சமயத்தில் பழங் கால மக்கள் தன்னலம் இன்றிப் பிறர் நலம் கருதி வாழ்ந்தது போலவும், அன்பையும் அருளையும் போற்றி வாய்மை வழி ஒழுகிச் சான்ருண்மையுடையவராய்த் திகழ்ந்தது போலவும் நாம் வாழ முற்பட வேண்டும். புதிது புதிதாகத் தோன்றும் விஞ்ஞான வளர்ச்சிகள் யாவும் உலகத்தின் அழிவுக்குப் பயன்படாமல் ஆக்கத்திற்கு - இன்ப வாழ்விற்கு - அமைதிக்கு உதவ வேண்டும். இங்ங்னம் முற்கால வாழ்விலும் இக்கால வாழ்விலும் சிறப்புடையன்வற்றை அறிந்து கடைப் பிடித்து வாழ்வதே உண்மையான நாகரிக வாழ்வா கும். உங்கள் கருத்துக்களை நேர்மையோடு எடுத்துக்
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/52
Appearance