உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நித்திலக் கட்டுரைகள் இருக்கட்டும் அண்ணு, அந்தத் திருக்குறளுக்கு நீங்கள் பொருள் கூறவேயில்லையே ! மணி தம்பி, அவ்விதமே கூறுகின்றேன். முதலில் அந்தப் பாட்டை அன்வயப்படுத்திக்கொள்ள வேண்டும். கணி அன்வயம் என்பது என்ன அண்ணு ? மணி : சொற்களைக் கொண்டுகூட்டுதல், அதா வது பாட்டினை உரைநடையின்படி ஒழுங்கு படுத்திக் கொள்ளுதல் ; இதற்கு அன்வயப்படுத்துதல் என்பது பெயர். * உலகத்தொடு ஒட்ட ஒழுகல் கல்லார், பலகற்றும் அறிவிலாதார்’ இதுவே இந்தப் பாட்டின் அன்வயம் ஆகும். உலகத்தோடு - உலகத்தில் உள்ள உயர்ந்த மக்க ளோடு, ஒட்ட ஒழுகல் - சேர்ந்து ஒழுகுதலை, கல்லார் - தெரிந்து கொள்ளாதவர், பல கற்றும் - பல நூல்களைக் கற்றிருந்த போதிலும், அறிவிலாதார் - அறிவில்லாத வரே ஆவர். இங்கே உலகம் என்பது உலகத்தில் உள்ள பெரி யோரைக் குறிக்கும். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே, என்பது வழக்கு. கணி நல்ல விளக்கம் தந்தீர்கள் அண்ணு ! நன்றி ! வணக்கம் ! மணி : தம்பி, நீயும் காந்தி அடிகளைப்போல ஒழுக்கத்திற் சிறந்தும், திருவள்ளுவரைப்போல அரிய நூல்கள் இயற்றியும், நம் குடும்ப மூதாதையர்களைப் போலக் கற்ற வண்ணம் ஒழுகியும் பேரும் புகழும் பெற்றுத் திகழ்வாயாக!