5 <> |ುಖ696567675ಕ್ತ! ഥങ്ങിധlfങ്ങ് ಹಿgā] கேட்பதில் பிரியம் உடையவள். எதைக் கேட்டாலும் அதில் புதியவனவற்றை ரசிக்கவும், தன் மனசுக்கு சரியெனப் படாததை கடுமையாக விமர்சிக்கவும் தயங்காதவள். வாக்குறுதிக்குக் கட்டுப்பட்டு இறுதிவரை உறுதியாக நின்ற சிறுவன் கசபியான் காவின் இயல்பைச் சொல்லும் கதையை அவளால் ரசிக்க முடியவில்லை. எனவே, காவிய நாயகனான கசபியான்காவை 'மாங்காமடையன் எனச் சாடுகிறாள். அந்த வார்த்தையும் சிறுமியின் விமர்சனமும் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. இருவர் மனநிலையும் வேறுவேறு தான். பொதுவாக மனசின் போக்கை யாரும் புரிந்து கொள்ள இயலாது. எல்லாக் காலங்களிலும் மனம் ஒரே மாதிரித் தான் செயல்பட வேண்டும் என்பதில்லை. அதன் புதிர்த்தன்மை ஒரு சிறுவனின் இயல்புகளிலும் எண்ணப் போக்கிலும் காணப்படுவதை எடுத்துச் சொல்கிறது ரசம் நிறைந்த சிறுகதையான மனம் ஒரு புதிர். குற்ற உணர்வால் குமையும் இயல்பும் மனசுக்கு உண்டு. இல்லாததை இருப்பதாக நினைத்தும், கண்முன் காணப்படுவதை, பல புறத்துண்டல்களின் பயனாக, இல்லையென மயங்கிக் குழம்புவதும் குமைவதும் மனசின் தன்மைகள் தான். இவற்றைப் பயன்படுத்தி ஒரு பெரியவரை பழிவாங்க முற்பட்ட ஒருவன் விளையாட்டு என்று ஆரம்பித்து ஒரு வேலை பண்ணுகிறான். அது குரூரமான விளையாட்டு. அதன் முடிவு கொடுமையானது. விபரீத விளையாட்டு என்ற சிறுகதை மனிதர்களின் சிறுமதியையும், ஒரு பெரியவரின் மனஉளைச்சலையும் உணர்ச்சிப் போராட்டத்தையும் நயமாக விவரிக்கிறது. தனது ஆசை தோல்வியுற்றதால், தன் எண்ணத்துக்கு ஆட்படாத அழகனை பழிவாங்கத் துடித்தது ஒரு அழகியின் மனம். அவள் அழகில் கிறங்கி அவள் பேரில் மோகம் கொண்டிருந்த ஒரு வீரன் அவள் ஆட்டுவித்தபடி செயல்புரிந்தான். நாசம் விளைவித்தான். அழகியின் மனம் திருப்தியுற்றதா? காலப்பாழில் கலந்து கிடந்த ஒரு
பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/7
Appearance