உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவுச்சரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் i i

விசயம் தெரிஞ்சது மாதிரி காட்டிக்கொள்ள விரும்புறவங்க, ஒகோ, சிவபுரமா? திருநெவேலிப் பக்கமா? திருநெவேலிக்கு கிழக்கேயா மேற்கேயா என்னு விசாரிப்பாங்க. திருநெவேலியி லிருந்து கிழக்கே சில மைல்கள் தள்ளி இருக்குதுங்கிறேன். வேறே சிலபேரு, அந்த ஊருக்குப் பக்கத்திலே இருக்கா? இங்கே போற ரூட்மேலே இருக்குதா? என்றெல்லாம் தூண்டித் தொளேப்பாங்க. இந்த அக்கப் போர்லாம் என்னத்துக்கு, சும்ம: சிம்ப்பிளா திருநெல்வேலின்னு சொல்லிட்டுப் போவோமே என்று தான் அப்படிச் சொல்றது. திருநெல் வேலியிலேயே குடியிருக்கிறவன் என்பதேைல எவனுக்கும் தலையிலே கிரீடம் ஏறிடப்போறதில்லே; பக்கத்து கிர மத் திலேயோ, அதைவிடத் துரமான அருதப் பட்டிக் காட்டிலேயோ பிறந்து வளர்ந்தவன்னு தெரிஞ்சுபோறதினலே எவனுக்கும் மதிப்பு குறைந்துவிடப் போறதுமில்லே. மனுச லுக்கு மதிப்பு என்கிறது.

‘அண்ணச்சி என்ன தூக்கமா? என்று கேட்டபடி, படி ஏறி வந்தார் ஒருவர். செருப்புகளேத் திண்ணேயில் ஒரு ஒரத்தில் விட்டுவிட்டு, உள்ளே வந்தார்.

வயது அதிகமானவர்தான். ஆணுல் மயிலேறும்பெருமாள் பிள்ளேயை விட வயது குறைந்தவர். இருவரையும் சேர்த்துப் பார்க்கிறபோது, வந்தவர் தான் மூத்தவர் போலும் என்று எண்ணத் தூண்டுகிற அளவுக்கு, உடல் வாடித் தளர்ந்து முதுமைத் தோற்றம் பெற்றிருந்தது. வாழ்க்கை வறட்சி அவர் மீது தன் கைவண்ணத்தைத் தாராளமாகவே காட்டி யிருந்தது.

தண்ணீரில் தினசரி தோய்த்து, வெயிலில் உலர்த்தி, ஒயாது உபயோகித்து வந்ததால் பழுப்பேறித் தோன்றிய நாலு முழ வேட்டியும்-கறுப்புக் கரை போட்டது-நீளமும் அகலமும் கொண்ட சிட்டித் துண்டு’ம் அவரை அணி செய்தன. தலையில் பெரும் பகுதி வழுக்கையால் மினு மினுத்தது. எஞ்சிய இடங்களில் வெள்ளே மயிர் குச்சி குச்சியாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/11&oldid=589251" இலிருந்து மீள்விக்கப்பட்டது