53 நினைவுன்
சொன்குள் : அது சரிப்படாதக்கா. வாடகையின்னு அஞ்சு, பத்து வந்து என்ன நெறையப்போகுது 1 என்னத்தான் உனக்குத் தெரியுமே. யாரு நாத்தமும் எனக்கு ஆகாது. அவொ கட்டிப்போட்ட வீட்டை, பெருக்கி மொழுகி சுத்தமா வச்சிருக்கதைவிட எனக்கு வேற வேலே என்ன இருக்கு? இதுவும் இல்லேன்ன தின்னுட்டுத் தின்னுட்டு கிடபூதம் மாதிரிக் கிடந்து தூங்குவேன். அது எதுக்கு ’.
உம் பவிசு குலேயோ வெள்ளூரிலே நீ கிடந்த கெடப்பு எனக்குத் தெரியாதாக்கும் என்று பர்வதத்தக்கா எண்ணிக் கொண்டபோதே, அது சரிதான். இல்லே, வாடகைக்குக் கண்ட விடுவையோன்னு கேட்டேன். நல்ல ஆளாப்பார்த்து வைக்குனுமில்லா. நம்ம காடுவெட்டியா தம்பி பொண்டாட்டி மாருந்தைக்காரி இருக்காள்ளா, அவ தனக்கு ஒரு வீடு வேனும், இருந்தா பார்த்துச் சொல்லக்காண்ணு; அவ வந்தா உனக்கும் துணையா இருக்கும்லா. நீ பகல்லே தனியா இருக்கே. வாயுக்குத்துச்சு, வயித்தை வலிச்சுது, மண்டையிடி காய்ச்சல்னு வந்துதுன்னு சொன்ன, கூடவே ஒருத்தி இருந்தா உதவிதானேன்னு நெனேச்சேன் என்று நீட்டி நீட்டிப் பேசினுள்.
நீ பொட்டுப் பொடுக்குன்னு போக ! உனக்கு வாந்தி பேதி வர ! நீ நாசமாப் போக! என்று மற்றவள் மனசாற. வசைபாடியபோதே, ஊம். ஊருக்கெல்லாம் துணை இருக்கிற உலகம்மா எனக்கும் துணையிருப்பாள் என்று தேவி பராசக்தி மீது பாரத்தைப் போட்டு, பேச்சை முடித்துவிட்டாள்.
அப்புறம் மகனிடம் இதை விரிவாகவே சொன்னாள்-தன் மன ஓட்டங்களுக்கும் ஒலிவடிவம் கொடுத்து. -
மயிலேறும்பெருமாள் சிறுவயது முதலே தன் அம்மையை கொண்டிருந்தான். அவளுடைய ஆசாபாசங்களும் உணர்ச் சிகளும் அவனுள்ளும் பிரதிபலித்து வளர்ந்தன. தனது அம்மா வுக்காக அப்பா கட்டிமுடித்த அந்த வீடு, தனக்காகவே உரு: வானது என்ற நினைப்பு, அதனிடம் அளவுக்கு அதிகமான ஈடுபாடு கொள்ளும்படிச் செய்தது அவனே.