பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து இரண்டு பாபிகள் -

அவளாகத் தேறிய பிறகு, அவள் சோகக் குரலில் முனங்கினாள், "எல்லாரும் அப்படித்தான் நினைக்கிறார்கள். காசு ஆசை பிடித்தலையும் பிசாசு என்றுதான். நான் என்ன பணத்துக்காகமட்டும்தானா இப்படித் திரிகிறேன்? நானும் மனுஷப் பிறவிதானே? நாலுபேரைப்போல வாழவேண்டும் என்ற ஆசை எனக்குக் கிடையாதா? நாலு பேரோடு பேசிப் பழகிச் சிரித்துக் கலகலகப்பாக இருக்க வேணும் என்ற நினைப்பு எனக்கு இருக்காதா? எனக்கும் மனம் உண்டு, உணர்ச்சிகள் உண்டு என்று யார் நினைக்கிறார்கள்? காசை வீசிவிட்டால், அவர்கள் சொல்படி எல்லாம் இயங்கக் கூடிய நடந்தாக வேண்டிய மிஷின் என்றுதானே எல்லோரும் எண்ணுகிறார்கள்?."

அவள் பேச்சில் தொனித்த உண்மை அவர் இதயத்தைத் தொட்டது. ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக அவர் பேசினார். நீ ஏன் இந்தத் தொழிலில் ஈடுபட்டாய்?" என்று கேட்டார்.

"ஏனா? ஏன் என்றா கேட்கிறீர்கள்? உயிர் வாழ வேண்டுமே அதற்காகத்தான். எலலோரும் ஏதாவது ஒரு தொழில் செய்துதானே பிழைக்கவேண்டியிருக்கிறது. எனக்கு வேறு என்ன தொழில் தெரியும்?" என்று வெறிபிடித்தவள் மாதிரிக் கத்தினாள் அவள்.

பிறகு தன் வரலாற்றைச் சொன்னாள். அவள் கதையில் புதுமை எதுவுமில்லை. நகரத்துக்கு வந்தால், சினிமாவில் சேர வாய்ப்புகள் கிட்டிவிடும்; சினிமாவில் சேர்ந்துவிட்டால் சுலபத்தில் புகழும் பணமும் பெறலாம். பிறகு ராணி மாதிரி வாழ்க்கை நடத்தலாம் என்று ஆசைப்பட்டு, பட்டணத்துக்கு வந்து, எவன் எவனையோ நம்பி ஏமாந்து வஞ்சிக்கப்பட்டு - நாசமாய்ப்போன ஆயிரக்கண்க்கான பெண்களில் அவளும் ஒருத்தி ஒரு தடவை வழுக்கி விழுந்த பிறகு நிமிர்ந்து நிற்க வகை அற்றவளாய், தெம்பற்றவளாய், துணையற்றவளாய் தவித்து, தறிகெட்டு பாழ்பட்டுப் போனவள் அவள் அவளுடைய பிழைப்பும் நடந்து கொண்டு தானிருந்தது.

"யாருடைய பிழைப்புதான் நடக்கவில்லை? யாருக்குத்தான் சாக மனம் வருகிறது?" என்று அவள் கேட்டாள். அவர் தலையசைத்தார்.

அவள் வாழ்விலே அமைதி இல்லை. இன்பம் இல்லை. வளம் இல்லை. பசுமை இல்லை. வறுமை இருந்தது. பயம் இருந்தது.வெறுப்பு