உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

39

‘தமிழ் படிக்க வாருங்கள்; உண்டியும், உறையுளும் (ஹாஸ்டல்) இலவசம்: கட்டணம் இல்லை” என்று அழைத்து தமிழ் அறிவு புகட்டிடும் சங்கமாகச் செயல்பட்டது அது! செந்தமிழ் எனற பெயரில் திங்கள் இதழ் தொடங்கி அதன் மூலமுமf எனறுமுள தென்றமிழின் சிறப்புகளைத் தமிழர்களுக்கு எடுத்துக்காட்டி தமிழ் வளர்ப்பதிலும் சங்கம் தீவிரம் காட்டியது!

ஞானியாரடிகள் தமிழ் வளர்த்த காலகட்டத்தில் ... தமிழ்க் கல்விக்கு எனத் தமிழ்க் கல்லூரி எதுவும் இருந்ததில்லை. தஞ்சையை அடுத்த திருவையாற்றில் வடமொழிக் கல்லூரி - சமஸ்கிருதக் கல்லூரி ஒன்று இருந்தது. அது தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் நிறுவப்பட்டது. பிற்காலத்தில் அது தஞ்சை மாவட்ட ஆளுகைக் கழகத்தில் (DISTRICT BOARD) மேற்பார்வையில் நடத்தப்பட்டது. அடிகளார் திருவையாற்றுக்குச் சென்றபோது, அடிகளாரின் வடமொழிப் புலமையை அறிந்திருந்த அக்கல்லூரியினர் அடிகளாரின் வட மொழிப் புலமையைப் பாராட்டி - வடமொழியிலேயே எழுதப் பெற்ற ஒரு பாராட்டுப் பத்திரம் படித்து வரவேற்றனர். அக் கல்லூரியின் தோற்றம் வளர்ச்சி - அதன் பணிகள் பற்றி யெல்லாம் அடிகளார் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

அவரது உள்ளத்தில் ... அதே கல்லூரியில் தமிழுக்கு ஏற்றம் அளிக்க வேண்டும் என்று அப்போதே தோன்றிவிட்டது. திருப்பாதிரிப்புலியூர் திரும்பியதும் வடமொழி மட்டும் கற்பிக்கப்படும் அந்தக் கல்லூரியில் தமிழையும் கற்பிக்கச் செய்ய வேண்டும் என்ற உறுதி மிகுந்தது அவருக்கு.

எண்ணிய எண்ணியாங்கு முடிக்கும் திண்ணியரான அவர் அன்று முதலே - எடுத்த காரியத்தை முடிக்க முயற்சிகளை முடுக்கிவிடலானார்.

திருவையாறு கல்லூரியை இயக்கி வந்த தஞ்சை மாவட்டக் கழக (DISTRICTBOARD)த்தின் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த உமாமகேசுவரம் பிள்ளை - அடிகளார் பால் அன்புமிகக் கொண்டவர். அவரை அடிகளார் தம் இருப்பிடத்துக்கு அழைத்து திருவையாறு கல்லூரி தொடர்பான அறக்கட்டளை பற்றி ஆராயச் சொன்னார். மாவட்டக் கழகத்தின் தலைவராக இருந்தவரோ - தமிழர் குலம் உயரப்பாடுபட்ட சர்.ஏ.டி. பன்னீர் சேல்வம்!

உமாமகேசுவரனார் தஞ்சை சென்றார். திருவையாறு கல்லூரி தொடங்கப்பட்ட காலத்து அதை உருவாக்கிய