உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

வல்லிக்கண்ணன்

அப்போது ஏற்பட்டது. கேட்ட நாங்கள் வாழ்க்கையில் பிறகு அச்சமய தத்துவங்களை என்றுமே மறக்க வியலாது. பண்டைக் காலத்தில் எழுந்த புலமை மிக்க உரையாசிரியர்களின் இலக்கண இலக்கிய உரைகளையும், சூத்திர பாஷ்யங்களையும் பார்த்திருக்கிறோம். அவை அனைத்தின் தொகுப்பாகவும் சுவாமிகள் பாடம் இருந்தது என்று கூறுவது மிகையன்று. பேராசிரியர் கூறும் உரை நுட்பங்களும், சிவஞான சுவாமிகள் போன்றார் கூறும் சமய நுட்பங்களும், சிரமமில்லாமல் எளிதில் எங்களுக்குச் சொந்தமாயின.

சுவாமிகள் அடிக்கடி சொல்லுகின்ற ஒரு பாடல், திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் பாடிய சந்நிதி முறைப் பாடல்களில் ஒன்று. :

ஏது பிழை செய்தாலும் ஏழையே னுக்கிரங்கித்
தீது புரியாத தெய்வமே - நீதி
தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு.

மாம்பலம் தெய்வசிகாமணி முதலியாரவர்கள் வீட்டில் ஒரு சமயத்தில் பிரசங்கத்தில் இப்பாட்டைச் சொன்னார்கள். சொல்லி அப்படியே சில நிமிஷ நேரம் கண்ணிர் உகுத்தபடியே இருந்துவிட்டார்கள். பிறகு தான் சுய நினைவு வந்து, "நம : பார்வதி பதயே" என்ற முழக்கத்தோடு மீண்டும் பேச்சைத் தொடங்கினார்கள்.

மற்றொரு பாடலும் இங்கே குறிப்பிடத்தக்கது. பாடலை உச்சரிக்கின்ற முறையினாலே, இதுவே கேள்வியாகவும் இதுவே விடையாகவும் அமைந்துள்ளது.

இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவி அல்லேன்
நல்லறத்து ஞானி யல்லேன் நாயினேன்

சொல்லறத்துள்

ஒன்றேனும் இல்லேன் உயர்த்ததிருப் போரூரா
என்றேதான் ஈடேறு வேன்.

இந்தச் சிதம்பர சுவாமிகள் பாடலை அடிக்கடி தோத்திரப் பாடலாகவே பாடுவார்கள். "உயர்ந்த திருப்போரூரா என்றே நான் ஈடேறுவேன்?" என்று கூறும்போது, தொனியால் "திருப்போரூர் முருகப் பெருமானே! என்றைக்குத்தான் நான் கடைத்தேறப் போகிறேன்?" என்று இரங்குவதாகிய கேள்வி