29 4. நூல்கள் ஏழு நாட்களுக்குக் கடகைக் கொடுக்கப்படும். மற்ற வாசகர்களுக்கு வசதியாக, உறுப்பினர்கள் கு றி ப் பி ட் ட நாட்களுக்குள் நூல்களைத் திருப்பிக் கொடுத்து வி டு த ல் வேண்டும், 5 ஆய்வு உதவு நூல்கள், பருவ இதழ்கள் போன்றவை சில கு றி ப் பி ட் ட நிபந்தனைகளின்பேரில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். 6. நூலகத்திற்குச் சொந்தமான நூல்களையும், மற்ற பிற பொருள்களையும் உறுப்பினர்கள் பத்திரமாகவும், சுத்தமாகவும் வைத்திருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிருர்கள். 7. நூலகத்திற்குப் பொறுப்பாளராக நூலகர் இருப்பார். நூலகத் தைப் பயன்படுத்துவதற்கு அவருடைய உ த வி ைய யு ம் ஆலோசனை யையும் உறுப்பினர்கள் பெற்றுக் கொள்ளலாம். 3. உறுப் பினர் நூலகத்தைக் கிராமத்திலுள்ளவர்கள் மிகப் பெருமளவில் பயன்படுத்தும்படி செய்வதற்கு வேண்டிய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் சமுதாயத்தின் எல்லாப் பிரிவினரும். சாதி, மத, வயது, தொழில், பால் பாகுபாடு இல்லாமல் நூலகத்தின் உறுப்பினர்களாவதற்கு ஊக்கமளிக்க வேண்டும். படிப்பறிவில்லாதவர்களுக்கும், குறைந்த படிப்பு உள்ளவர்களுக்கும் நூலகம் தனியாகச் செயல் முறைகளை வகுத்து, அவற்றில் அவர்கள் பங்கு கொள்ளு மாறு செய்தல் வேண்டும். நூலகத்தின் உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை வைத்திருக்க வேண்டும். இப்பட்டியலில் உறுப்பினரின் i) பெயர் ii) தந்தை பெயர், iii) முகவரி, iv) வயது ஆகிய விவரங்கள் முக்கியமாக இடம் பெற வேண்டும். 4. நால் வழங்கல் நூல்களை உறுப்பினர்களுக்கு வழங்குவதும், அவர்களிடமிருந்து நூல்களைத் திரும்பப் பெறுவதும் நூலகப் பணியில் மிக முக்கியமான - தாகும். நூல்களைத் தேர்ந்தெடுப்பதில் வாசகர்களுக்கு நூலகர் உதவி புரிய வேண்டும் எந்த வாசகருக்கு எந்த நூல் பொருத்தமானது என்பதை நூலகர் உணர்ந்திருக்க வேண்டும். புதிதாகக் கல்வி பயிலும் பெரியவர்களுக்கு நூல்களை வாசித்துக் காட்டியும் நூலகர் உதவி செய்யலாம்.
பக்கம்:கிராம நூலகக் கையேடு.pdf/35
Appearance