இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
6. ஜாலியும் ஜோலியும்
(கால வேகத்தையும் வாழ்வின் போக்கையும் சித்தரிக்கும் ஒரு டாக்குமெண்டரி')
ரேடியோ அலறல் முனஞ்சிப் பட்டி முருகய்யா, செவந்தான் பாளையம் அவினாசி, குடியலூர் இசக்கி முத்து, பாலூர் எழுமலை நண்பர்கள், பாப்பாக்குடி சுப்புசாமி சகோதரர்கள், முசிரி கருப்பசாமி, தேவனூர் ராமுவும் நண்பர்களும் விரும்பிக் கேட்டிருப்பது...
‘வாழ்க்கை என்பது ஜாலி அதை அனுபவிப்பதே நம் ஜோலி” சினிமா சங்கீதம் ஜமாய்க்கிறது!
குடும்பக் காட்சி
அக்கா சினிமாவுக்கு வாறியா?
‘மாமி, இன்னிக்குக் கண்டிப்பாய் போகவேண்டியது தான்!” -