உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

வல்லிக்கண்ணன்

உவத்தல், கூட்டல், குறைத்தலின்றி உள்ளவாறே தெரிவித்தல். இம்முறையில் யான் அறிந்தவற்றைச் சுருங்கக் கூறுவது இக்கட்டுரையின் நோக்கம். இக்கட்டுரையைக் கண்ணுறும் அன்பர்கள் தத்தம் கருத்துக்களைத் தெரிவித்து நன்றி செலுத்துவார்களென்று நம்புகிறேன்.

1. சுவாமிகள் வடமொழியிலும், தமிழ் மொழியிலும் சிறந்த புலமையுடையவர்கள் என்பதை அனைவரும் அறிவர். தமது சொற்பொழிவுகளில் சுவாமிகள் கூறும் அடிப்படையான கொள்கைகட்கு வேதம், சிவாகமம், புராணம், திருமுறை, சித்தாந்த சாத்திரம் முதலியவற்றிலிருந்து தெளிவான ஆதாரங்கள் காட்டுவதை அறிஞர்கள் குறிப்பெடுத்துக் கொள்ளும் காட்சியை நம்மிற் பலர் பல முறை கண்டிருக்கிறோம். ஏனையோர் தங்கள் உபந்நியாசங்களில் பிரமாணங்களைக் கூறும்போது தங்கட்கு அவற்றின் பொருள் விளங்குவதாகப் புலப்படுத்துவதில்லை; கேட்போரும் பலர் உபந்நியா சங்களில் வடமொழிப் பிரமாணங்களும் பிறவும் கிளிப்பிள்ளை வாக்காகவே உபந்நியாசகர்களால் கூறப்படு கின்றனவோ என்று ஐயுற நேரிடுகிறது. சுவாமிகளுடைய உபந்நியாசங்களில் இவ்வித சந்தேகம் எஞ்ஞான்றும் எழுந்ததில்லை.

பற்பல உபநிடத மேற்கோள்களைப் பதம்பதமாகப் பிரித்துப் பொருள் கூறுவதோடமையாது அவற்றிற் கூறப்படும் உண்மைகள் புராணங்களில் எவ்வாறு உபப்பிரமாணம் செய்யப்பட்டுள்ளன. வென்பதையும், தேவார ஆசிரியர்களும் சந்தான குரவர்களும் அவைகளை எவ்வாறு அழகுபட விவரித்துள்ளார்கள் என்பதையும் சுவாமிகள் விவரிப்பதைக் கேட்கும் அன்பர்கள் "ஈதன்றோ செவிச் செல்வம், இத்தகைய சொற்பொழிவுகளை நமது செவிகள் கேட்கவும் பெறின், "மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்தமாநிலத்தே" என்று தமது நெஞ்சுக்குரைப்பார்கள். சுவாமிகள் வேத சிவாகம புராண வாக்கியங்களை விளக்குங்கால் வேதம் போம் வாயார் அங்காந்த வாயராகிப் பிரமித்துத் தம்பித்திருக்கும் காட்சியையும் நம்மிற் சிலர் காணும்பேறு பெற்றுள்ளோம்.

2. சுவாமிகள் மிகத் தெளிவாகப் பேசும் பேராற்றலுடையவர்களென்பதை மகளிரும் சிறாரும் கூறுவர். முப்பொருளுண்மை அத்துவித இலக்கணம் போன்ற கடினமான பொருள்களை விளக்குங்கால் இருப்புக் கடலையை மெல்வது