144
வல்லிக்கண்ணன்
சுவாமிகளிடம் அன்புகாட்டி அவர்களது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் பெற்ற அறிஞரும் செல்வரும்
ஸ்ரீ சுவாமிகள், அறிஞர் - அறியாதார் சிறியோர் முதியோர், செல்வர் - வறியர், இல்லற வாழ்வினர் - துறவற மேற்கொண்டோர், வணிகர், தொழிலாளர், உத்தியோகத்தி லிருந்தோர் ஆகிய எப்பாலவரிடத்தும், சாதி, மத, இன, சமய வேறுபாடுகள் கருதாமல் ஒரு படித்ததாகவே பழகுவார்கள். முன். பல இடங்களிற் குறிப்பிட்டாங்கு அந்நாளைய அறிஞர் யாவரும் சுவாமிகளைப் பற்றி அறிவர். அவர்களைத் தரிசித்து அவர்களிடம் உரையாடுதலையே தாம் பெற்ற பேறாகக் கருதுவார்கள். எந்த வேளையில் எவர்வரினும், அவர்களைக் காத்திருக்கச் செய்யும் வழக்கமே அவர்களிடம் காண இயலாது. நீராடித் தூய்மையுற்றுப் பூசனைக் கெழுந்தருளுங் காலமேயெனினும், வெளிவந்து சற்றே இருங்கள்; பூஜை முடித்து வந்து விடுகிறோம் என்ற அளவுக்காவது திருவாய் மலர்ந்தருளிச் செல்வார்கள். பூசை முடிந்ததும் நேரே வந்து, அவர் வந்த செய்தியைப்பற்றிக் கேட்டறிந்து உடனே ஆவன புரிவார்கள். ஒரே எடுத்துக்காட்டினை ஈண்டுக் குறிப்பிடுவோம்.
1981 அல்லது 32 ஆம் ஆண்டாக இருக்கலாம். ஒரு மகம்மதியச் சிறுவர் வந்தார். மாலை வேளை, சுவாமிகள் வெளிக் கூடத்தில் தனியே உலவிக் கொண்டிருந்தார்கள். வழக்கம்போல் இடையில் ஒரு 4 முழக் கல்லாடை, அதன் மேல் கட்டி முடிக்கப்பெற்ற ஒரு 4 முழத் துண்டுடன் இருந்த அவர்களிடமே அவர் சென்றார். சுவாமி எங்கே? என்று கேட்டார். என்ன தகவல் ? என அவரை வினவ அவர், தான் S.S.I.C. எழுதியதாகவும், தமிழில் 16 மதிப்பெண்களே பெற்றதாகவும், பிற பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதாகவும், சுவாமிகளையடுத்தால் நல்ல பயிற்சி கிடைக்கு மென இன்ன அன்பர் அனுப்ப வந்ததாகவும் கூறினார். தம் இயல்பின் வண்ணம், எளியராய் வாயிற்படிமீது அமர்ந்து, அவரை அருகிருத்தி முதலிற் சில பாடல்களைப் படிக்கச்செய்து, தமக்கேயுரிய சிறப்பான முறையில் ஒவ்வொரு பாடலையும் விளக்கிப் போதித்தார்கள். சில பாட்டுகள் விளக்கி முடிந்தவுடன் நாளை இன்ன நேரத்திற்கு வருக எனத் திருவாய் மலர்ந்தருளி அனுப்பினார்கள். அவர் மீண்டு சென்று விட்டார். சென்றவர் தன்னை மடாலயத்திற்கு ஆற்றுப்படுத்திய சுவாமிகளின் அன்பராம் திருஞானசம்பந்தம் பிள்ளையிடம்