பகுதி) அக்கரச் சதகம் 557
நீ வருதி ; ராமா மாரா - இராமனை யொப்பவனே! மன்மதனை யொப்பவனே! ஆ - காமதேனுவை யொப்பவனே! (அன்றி இடபம் போன்றவனே!) ஆமா - ஒழுங்குடையவனே! மேதா - நல்லுணர்வுடையவனே 1 மே மார் ஆர் - மேன்மை பொருந்திய நின் மார்பிலுள்ள ஆத்தி மாலையை, நீ தா - நீ தருதி (எ . று.) ஆமன் - ஒழுங்குடையவன். மேதன் - அறிவுடையவன். நீதன் - நீதியையுடையவன். தா - வலிமை. மார் - மார்பு என்பதன் கடைக்குறை விகாரம். - -
இக்கவி, ஸர்வதோபத்ர சித்திரத்தில் எட்டு வழியாகப் படிக்கத் தக்கதாய் எழுத்துக்கள் அமைந்து நிற்கும். நந்நான்கு வரிகளாக முதலறை தொடங்கி வலப்பக்கமாக வாசித்தும், வாசித்தவாறே இறுதியினின்று முதல் வர வாசித்தும், முத லறையினின்று கீழிழிய வாசித்தும், வாசித்தவாறே மேலேற வாசித்தும், முதல் வரியினிறுதியினின்று கீழிழிய வாசித்தும், வாசித்தவாறே மேலேற வாசித்தும், இறுதி வரியின் முதல் தொடங்கி இடப்பக்கமாக வாசித்தும் முடித்து நோக்குக.
13. அக்கரச் சுதகம்
முழுவதும் நின்று ஒரு பொருள் பயப்பதாயும், ஒவ்வோ ரெழுத்தாக நீக்க வெவ்வேறு மொழியாய் வெவ்வேறு பொருள் பயப்பதாயுமுள்ள ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு பொருள்கள் காட்டிப் பாடப்படுவ்து அக்கரச் சுதகமாகும். அக்கரம் - எழுத்து , சுதகம் - குறைத்தல்.
இதற்கு உதாரணம் :- . . . . • . . .
பொற்றூணில் வந்தசுடர் பொய்கை பயந்த வண்ணல் சிற்றாயன் முன்வனிதை யாகி யளித்த செம்மல் மற்றியார்கொ லென்னின் மலர்தாவி வணங்கி நாளுங், கற்றோர் பரவுங் கநகாரி நகாரி காரி. (உ௫)
'இதன் பொருள்-பொன் தூணில் வந்த சுடர் - பொன் மயமாகிய தூணிலே பிறந்த சோதிஸ்வரூபி, பொய்கை பயந்த அண்ணல் (சரவணப்) பொய்கை பெற்ற பெருமையுடையவன், சிறுமை ஆயன் முன் வனிதை ஆகி அளித்த செம்மல்- சிறிய இடையனாகிய கண்ணன் முற்காலத்தில் மோகினி பெண்ணாகிப் பெற்றெடுத்த கடவுள், யார் கொல் என்னின் (இவர்