உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

போக்கிற்கொப்ப (இ விக்கணம்) தயாரித்துக் கொள்ள வேண்டும்.

காம்போதி ராகம் போட்டுப் பாட வருவதுதான் கவிதை என்று யாராவது வாதித்தால் அவர்களுக்குக் கவிதை இன்னதென்றே தெரியாது என்றுதான் நாம் பதில் சொல்ல வேண்டும். ஆங்கிலக் கவிதையை நாம் ராகம் போட்டுப் பாடியா அனுபவிக்கிருேம்? அவர்களுடைய ராகத்தைப் போட்டுப் பாடினல் தான் அது நன்ருக விளங்கும் என்று சொல்ல யாராவது முன் வருவார்களா?

பொதுவாகக் கவிதைக்கு, எந்த பாஷையிலிருந்தாலும் சரி, ஒரு தனி ராகமும் தாளமும் இருக்கின்றன. அதை அனுபவிக்க கர்நாடக சங்கீதத்தின் ஒத்தாசையோ, ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் ஒத்தாசையோ, ஐரோப்பிய சங்கீதத்தின் ஒத்தாசையோ வேண்டியதே இல்லை. கவிதை யின் ராகம் உள்ளத்தில் கிளம்புகிறது. ஹிருதயம் தாளம் போடுகிறது

"வீ n ஹெவன் இன் தி ஒயில்ட் ஃபிளவர் அண்ட் எட்டர்னிட்டி இன் எ கிரைன் ஆப் ஸாண்ட்’ என்ற சித்தவாக்கை அனுபவிக்க நாம் ஐரோப்பிய சங்கீதத்தைக் கற்க வேண்டியதில்லை.

  • புல்லினில் வைரப்படை தோன்றுங்கால்’ என்பதை அனுபவிக்க காம்போதி ராகமா வேண்டும்?

"நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக!

நமது பாட்டு மின்னலுடைத்தாகுக!” என்ற மகாவாக்கு கவிதையாக எந்த சங்கீதத்தின் உதவி வேண்டும், கேட்கிறேன்.” .

(கலாமோகினி-13) இலக்கணத்துக்கு ஏற்ப இனிய கவிதைகள் படைப்பதில் தன் ஆற்றலை ஈடுபடுத்தி வெற்றிகள் கண்டவர் கவிஞர் கலைவாணன். (திருவானைக்காவல் க. அப்புலிங்கம்) ஆயினும் அவர் வசன கவிதைகளை வெறுக்கவில்லை. இப் புதுமுயற்சி பற்றிய தன் கருத்துக்களை அவர் கலாமோகினி'யில்