இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வல்லிக்கண்ணன் 1} திருமிகு த. ஜெயகாந்தனின் அன்றைய பெருவிருப்பு இன்று இந்தத் தன் வரலாற்று நூலில் நிறைவேறி இருப்பதை இதைப் படிப்பவர்கள் உணரமுடியும்.
- கடந்த ஆண்டுகளில் எங்கள் பூங்கொடி பதிப்பகம், வல்லிக்கண்ணன் அவர்களுடைய மூன்று சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளது.
- என்றாலும், இவருடைய தன்வரலாற்று நூலை வெளியிடும் அரிய வாய்ப்பு டாக்டர் மா. இராசமாணிக்கனார் ஆய்வு வட்டத்தின் மூலமே கிடைத்தது. இந்த அமைப்பே வல்லிக்கண்ணன் அவர்களை அணுகி, தன்வரலாற்று நூலை எழுதும்படி வேண்டி, அவரைச் சம்மதிக்க வைத்துத் தனித்தன்மை வாய்ந்த இந்த வரலாற்று ஆவணம் உருவாகக் காரணமாக அமைந்தது. இந்த அமைப்பைச் சேர்த்தவர்களின் சலியாத உழைப்பின் காரணமாகவே இந்நூல் முழுவடிவம் பெற்று இன்று உங்கள் கரங்களில் தவழ்கிறது.
- காலங்களைக் கடந்து வாழக்கூடிய வல்லமை பெற்ற வல்லிக்கண்ணன் போன்ற பெரியவர்களின் தன்வரலாற்றின் உருவாக்கத்திற்கும் எங்கள் பதிப்பகத்தின் மூலம் அது நூலாக வெளிவருவதற்கும் காரணமானவர்களான, தன் வரலாற்று நூல்களையும் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் உருவாக்கி வெளிக்கொணர்வதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டு இயங்கும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் ஆய்வு வட்டத்தின் தலைவர், பேராசிரியர் முனைவர் இ. சுந்தரமூர்த்தி (பேராசிரியர் - தலைவர், தமிழ் இலக்கியத்துறை. சென்னைப் பல்கலைக்கழகம் அவர்களுக்கும் செயலாளர் பேராசிரியர் மா.ரா. அரசு அவர்களுக்கும் நெஞ்சு நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
வே. சுப்பையா பூங்கொடி பதிப்பகம்