பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛莎佥 வாழ்க்கைச் சுவடுகள் தமிழ் நாட்டுப் பத்திரிகைகளின் போக்கிலும் மாறுதல் புகுந்தது. வெகுஜனப் பத்திரிகைகள் என்றும் பல்சுவை இதழ்கள் என்றும் லட்சியங்களைவிட லட்சங்களிலேயே கருத்தைச் செலுத்தின. வாசகர்களின் எண்ணிக்கையைப் பல லட்சங்கள் அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் கொண்டு, அதற்கேற்றாற்போல் கொள்கைகள் வகுத்துக் கொண்டன. வாசகர்களைச் சிரமப்படுத்தாத - ஆனால் அவர்களது ஆவலைத் தூண்டுகிற- கிளுகிளுப்புக் கதைகள், கிசுகிசு சமாச்சாரங்கள், ஆண் பெண் செக்ஸ் உறவு பற்றிய சுவாரசியமான கதைகள், பெண் அங்க வர்ணனைகள் முதலியன கொண்ட கதைகள், கொலை மர்மம் நிறைந்த தொடர்கதைகள் போன்றவற்றை வெளியிடுவதில் உற்சாகம் கொண்டன. கதைகள் மற்றும் படைப்புகளில் தனித்தன்மை, நடைச்சிறப்பு. குணச்சித்திரம் உளவியல், ஆழமும் கனமும் கொண்ட விவரிப்புகள் தேவையில்லை; நேரடியாக சம்பவங்கள் மேல் சம்பவங்களாகச் சொல்லிச் செல்வது, அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்க்கச் செய்யும் தன்மை சஸ்பென்ஸ்) போன்ற உத்திகளைக் கையாளும்படி உதவி ஆசிரியர்கள் பத்திரிகை எழுத்தாளர்களுக்கு வழிகாட்டினார்கள். வெற்றிகரமாகப் பத்திரிகை நடத்த வேண்டுமானால், ஒவ்வோர் இதழும் வாசகருக்கு எளிதில் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்க வேண்டும் சென்னை ஹைக்கோர்ட் அருகில் பஸ் ஏறுகிற பயணி ஒரு பத்திரிகையை வாங்கிப் படிக்க ஆரம்பித்தால், அவர் மயிலாப்பூர் குளம் நிறுத்தத்தை அடைகிற போது அதை வாசித்து முடித்து, திருப்தியோடு பத்திரிகையை மூடி வைக்க வேண்டும். அந்த ரீதியில் லைட்டர் விஷயங்களை உடையதாகப் பத்திரிகை அமைக்கப்பட வேண்டும் என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் அனுபவ ஞான உரை வெளியிட்டிருந்தார். - அவருடைய பத்திரிகை அப்படித்தான் உருவாகியது. விற்பனையைப் பெருக்கியது. அதைப் பின்பற்றி இதர வார இதழ்களும் சுலப சமாச்சாரக் கிளுகிளுப்பு வழியில் வழுக்கி ஓடலாயின. சினிமா நடிகை நடிகர்கள் முக்கியப்படுத்தப்பட்டார்கள். சினிமா விஷயங்களுக்கும் வம்பு வதந்திகளுக்கும் அவைதான் வாசகர்களுக்கு வெகுவாகப் பிடித்திருக்கின்றன என்று அதிக இடம் ஒதுக்கப்பட்டன. கவர்ச்சியும் வசீகரமுமான நிலைகளில் பெண்களின் படங்கள் அதிகம் அதிகமாக வெளியிடப்பட்டன. விற்பனையை அதிகப்படுத்தி லாடம் காணவேண்டும் என்ற நோக்கோடு பண்பாட்டைச் சிதைத்து, கலாசாரச் சீரழிவுக்கு வகை செய்கிற உள்ளடக்கம் பத்திரிகைகளில் மிகுந்தன. தரமான தன்மையில் உயர்ந்த விஷயங்களைத் தந்து கொண்டிருந்த பத்திரிகைகள் கூட வியாபார உலகில் போட்டி போட்டு, தங்கள் இருப்பை நிலைநாட்டிக் கொள்வதற்காக, கால வேகத்தோடு இழுபட்டுத் தம் போக்கை மாற்றிக் கொண்டன.