பாராயணப் பாடல்கள் 141
ஒருமுரு காவென்றன் உள்ளங் குளிர உவந்துடனே வருமுரு காவென்று வாய்வெரு வாகிற்பக் கையிங்ஙனே தருமுரு காவென்று தான்புலம் பாகிற்பத் தையன்முன்னே திருமுரு காற்றுப் படையுட னேவருஞ் சேவகனே.
†
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி
அயனென வாகி அரியென வாகி
அரனென வாகி அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ
எனதுமு னோடி வரவேனும்
மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரு வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை
மகிழ்கதிர் காம முடையோனே
செக கன சேகு தகுதிமி தோதி திமியென ஆடுமயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை
மலைமிசை மேவு பெருமாளே.
-திருப்புகழ்
- 肇 ++ சேந்தனைக் கந்தனைச் செங்கொட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்கு வள்ளி காந்தனைக் காந்தக் கடம்பனைக்
கார்மயில் வாகனனைச் சாந்துணைப் போது மறவா
தவர்க்கொரு தாழ்வில்லையே.
-கந்தர் அலங்காரம்
ந பிறந்திறங் துழலும் பெருவியா தியையும்
பெரும்பசி நோய்ச்சுடத் தளர்ந்து நிறங்குலைந் தொருவர் பின் றிரிங் துழலு . . . . நிரப்பெனுங் குறுவியா தியையுங்
மு-9