35
படிப்பார் உள்ளத்திலே தாழ்ந்த எண்ணங்களை உண்டாக்குவதில்லை. இதனால், மக்கள் நூல்களை நன்கு கற்றுப் பெரும்பயன் அடைகின்றனர். எனவேதான், திறந்த முறை மிகவும் இன்றியமையாத ஒன்று என்று ஒரு முகமாக இங்கிலாந்திலுள்ள நூலக அதிகாரிகள் முழங்குகின்றனர்.
பெரும்பாலோர் பொழுதுபோக்கை விரும்புகின்றனர் அதுவும் நல்வழியிலே பொழுதைப் போக்க விரும்புகின்றனர். எனவே அவர்கள், நெடுங்கதை, நாடகம், பேர் பெற்ற வாழ்க்கை வரலாறு, பயண நூல் ஆகியவற்றைப் படிக்கின்றனர். பொழுதுபோக்குக்காகப் படிப்போருக்கு உதவுதல் நூலகத்தார் கடன். அதனால், நெடுங்கதை போன்ற எளிய நூல்களை நூலகத்தார் வெறுப்பதில்லை. இந் நூல்களை வழங்கும் அதே நேரத்திலே, நூல்களின் தரத்தையும் நூலகத்தார் காத்துக்கொள்கின்றனர்.
பெரும்பாலான படிப்பு ஆதாயங் குறித்த ஒன்று அன்று. விருப்பங் காரணமாகவே நூல்கள் படிக்கப்படுகின்றன. ஏனையவர்கள் குறிக்கொண்டே படிக்கின்றனர். தேர்வுக்குப் படிப்போர், பல்கலைக் கழக மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியவர்கள் பொது நூலகத்தைப் பயன்படுத்துகின்றனர். ஏனையோர் தாம் மேற்கொண்ட தொழில் முன்னேற்றத்துக்காக நூலகத்தை நாடுகின்றனர். பொது நூலகத்தினால், நடப்பு வளர்ச்சிகளை அறிந்து காத்தல், நாளுக்கு நாள் தோன்றும் சிக்கல்களைத் தீர்த்தல், எடுத்த கருமத்தினைச் செய்யும் திறனும் சிறந்த தகுதியும், கருமத்தில் வெற்றியும் அடைவதற்குரிய சீரிய அறிவைப் பெறுதல் ஆகியவற்றை நாம்