பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

பாரதிதாசன்


வகைகளுள் தாலாட்டும் ஒன்று. 17ஆம் நூற்றாண்டிலிருந்த உபயகவி அப்பா என்ற வைணவப் புலவர் நம்மாழ்வார் மீது இரு தாலாட்டுப் பிரபந்தங்கள் பாடியிருக்கிறார். முதல் பிரபந்தம், தாலாட்டுப் பாடலில் நம்மாழ்வார் திரு அவதாரச் சரிதையைக் கூறுகிறது. வரலாறு முழுமையும் கண்ணிகளாலேயே தொடர்பான செய்யுளாகப் பாடுகிறார் 350 கண்ணிகள் உள்ளன. அதனுள், குழந்தையைத் தொட்டிலிற் கிடத்தி கண்வளரச் சொல்வதைக் கூறும் பகுதிகள் அவையுடையன. வச்சிரத்தாற் செய்த திருத் தொட்டிலில் பூ மழை சிந்துகிறார்கள்.)

மருக்கொழுந்து பிச்சியிருவாட்சிமுல்லை
மல்லிகைப் பூ தருக்கொழுந்து கோகனகம் சாதிவேற்

செண்பகப் பூ பாந்தள் அரசன் பணாமகுடப்
பாரகாக்குஞ்சேந்தர் புகழ்விளங்கந் தெய்வத்

தனிச்சுடரோ ஆவார்கள் ஒன்பதின்மர் ஆரியர்
முக்கோல் தரித்து வாழ்வார்கள் தொண்டர் தொண்டர் வாழப்

பிறந்தவனோ தண்டமிழும் வேதாந்த சாரப்
பெரும்பொருளும் மண்டலமும் விண்டலமும் வாழப்

பிறந்தானோ பத்திக்கு வித்தாய்ப் பணித்தடங்காப்
பண்ணவனை முத்திக்கு வித்தாய் முளைத்தவனைச்
சொன்னாரார்.

மற்றொரு பிரபந்தம் நமாழ்வார் பற்றிய
நூற்றெட்டுத் திருப்பதித் தாலாட்டு.