மாணவர் கெறி 15 கூர்ந்து நோக்கில்ை இந்தக் காலத்துக்கு-மட்டும் அன்று, இனி வருங்காலத்துக்கும் ஏற்றது என்பதை யும் சிறந்த மாணவர்கள் இந்தக் காலத்திலும் இவ்விதம் ஒழுகி வருதலையும் நாம் உணரலாகும் இவ்விதம் கற்றலோடு அமையாது மாணவர்கள் தாம் கற்றவற்றை மறவாது போற்றுதல் வேண்டும். ஆரும் வகுப்பில் கற்ற குற்றியலுகர இலக்கணத்தை அந்த வகுப்பிலேயே மறந்தொழிந்து ஏழாம் வகுப் பிலும் எட்டாம் வரும்பிலும் அதே குற்றியலுகர இலக் கனத்தை முற்றிலும் புதுமையாகக் கேட்பவன் சிறந்த மாணவன் ஆகான். ஒருமுறை தான் கற்றவைகளை மறு முறை நினைத்துப் பார்த்து ஐயம் எழுமேல் தன் தோழ ரிடமோ அன்றி ஆசிரியரிடமோ கேட்டுத் தெளிந்து கொள்ளுதல் வேண்டும். இவ்வித மெல்லாம் கற்றே நம் நாட்டுப் பெரியோர்கள் பேரும் புகழும் பெற்றனர். இனி, (மக்கள் வாழ்க்கையைக் குழவிப் பருவம், மாணவப் பருவம், வாலிபப் பருவம், முதுமைப் பருவம் என நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். இந்த நான்கு பருவங்களுள் மாணவப் பருவம் மக்கள் வாழ்க் கைக்குக் கடைகால் போன்றது. ஒருவர் தம் வாழ்க் கையை உயர்த்திக் கொள்ளுதற்கும் தாழ்த்திக் கொள்ளு தற்கும் காரணமாக இருப்பது மாணவப் பருவமே, அறிவு விளக்கத்துக்கும், பொருள் திரட்டுதற்கும், பேரும் புகழும் பெறுதற்கும். பிற எல்லா நலன்களையும் பெறுதற்கும் வழிகோலுவது இந்த மாணவப் பருவமே ஆகும். இத்தகைய அருமையான பருவத்தைப் பெற் றுள்ள மாணவர்கள் இதனை நல்ல வழியில் பயன்
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/21
Appearance