தேவாரமும் ஓர் இலக்கியமே 107 பாடலையும் மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு " என்பது போன்ற சம்பந்தர் பாடலையும், வாழ் வாவது மாயம் இது மண்ணுவது திண்ணம்' என்னும் அடியையுடைய சுந்தரர் பாடலையும் எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். சங்க இலக்கியங்களையும் பிற்காலக் காவியங்களை யும் கற்று மகிழ விரும்பும் தமிழ் இளைஞர்களுக்கும் இந்தத் தமிழ்மறை ஒரு சிறந்த வழி காட்டியாக இருத்த லைப் பலர் எண்ணிப் பார்த்துப் பயன் அடைய விழையா மலிருப்பது பெரிதும் வருந்தத் தக்கதேயாகும். சங்க நூல்களிலே காணப்படும் இயற்கை நவிற்சி போன்ற அணிகளும், இந்தத் தமிழ் மறையில் பல இடங்களி லும் அமைந்து இருத்தலைத் தமிழ் இளைஞர்கள் படித் துப் பயனடைதல் வேண்டும் என்ற எண்ணத்தாலேயே இக்கட்டுரை எழுதப்படுகிறது. பத்தாம் நூற்ருண்டினர் என்று ஆராய்ச்சியாளர் களால் கருதப்படும் திருத்தக்கதேவர் இயற்றியுள்ள சீவக சிந்தாமணியில் காணப்படும், காய்மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகின் கெற்றிப் பூமாண்ட தீங்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங் கதம் என்றிசை யாற்றிசை போய துண்டே' (கா.ம. பா. 2.) என்னும் செய்யுளில் அமைந்த இதே கருத்தினை இவருக்கு முற்காலத்தவர் என்று சொல்லப்படும் ஞான
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/113
Appearance