பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

08 கித்திலக் கட்டுரைகள் சம்பந்தர் திருவைகாவூர் என்னும் திருப்பதியில் உள்ள இறைவனைப் பாடும் முதற்பதிகத்திலே,

  • தாழையிள நீர் முதிய காய்கமுகின்

வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல் சேறுசெயும் வைகாவிலே ’’ என்று பாடியிருக்கின்ருர், யார் எவர் பாடலைப் பார்த்துப் பாடியிருத்தல் கூடும் என்னும் ஆராய்ச்சியில் இங்கே நான் இறங்க விழையவில்லை. எனினும், தேவாரத் திருமுறையிலும் இலக்கியச் சுவையுண்டு என்பதைத் தெரிவிக்கவே இதைத் தமிழ் இளைஞர்களுக்கு நினைப்பூட்டுகிறேன். " தென்னை மரத்தில் உள்ள தேங்காய் பழுத்துப் பாக்கு மரத்தின்மீது விழுகிறது. பாக்கு மரத்தில் உள்ள பழுத்த பாக்குகள் சிதறி வாழைக்குலையின் மீது விழுகின்றன. வாழைக்குலையில் உள்ள பழுத்த பழங் கள் வயலில் விழ, இந்த மூவகைப் பழங்களின் சாறு கிள் வயலில் உள்ள புழுதியைச் சேறுபடுத்துகின்றன என்னும் கருத்து இரண்டு பாட்டல்களிலும் அமைந்திருத் தலைக் கண்டு தமிழ் இளைஞர்கள் இன்புறலாம். கம்ப நாட்டாழ்வார் என்று சிறப்பித்துச் சொல்லப் படும் கவியரசராய்த் திகழ்ந்த கம்பர் பன்னிரண்டாம் நூற்ருண்டினர் என்பதும், அவர் பிறந்த ஊர் திரு வழுந்துரர் என்பதும் ஆராய்ச்சியாளர்கள் பலராலும் ஒப்பமுடிந்த உண்மைச் செய்தியாகும். ஞானசம்பந்தர் காலத்தை ஆராய்ச்சியாளர்கள் ஏழாம் நூற்ருண்டு என்று தக்க ஆதாரங்களுடன் நிலைநாட்டியுள்ளனர்.