தமிழ்மறை என்றும், மூவர்தமிழ் என்றும் சிறப்பித்துச் சொல்லப்படும் தேவாரத் திருமுறைகளைத் தோத்திர நூலாகக்கொண்டு இறைவழிபாட்டுக்குப் பயன்படுத்துவதைத் தமிழ் மக்கள் அனைவரும் நன்கு அறிவர். இந்தத் தமிழ்மறையைப் பழைய பண் முறை களுக்கேற்ப இக்கால இன்னிசைகளோடு சைவ மெய் யன்பர்கள் திருக்கோயில்களிலும், பொதுமேடைகளி லும் உருக்கத்தோடு பாடி வருவதையும் நாம் நேரில் காண்கின்ருேம். எனினும் அந்தத் திருமுறைகளை இலக்கிய நூல்போல் எண்ணிப் பொருளுணர்ந்து படித்து மகிழும் பழக்கத்தினையுடையார் நம் நாட்டில் மிகவும் அருமையாகவே காணப்படுகின்றனர். தேவாரத் திருமுறைகளில் உள்ள எல்லாப் பாடல்களையும் படித்துப் பொருள் உணர்தல் அரிதாயிருப்பினும் குறைந்த கல்வி அறிவுடைய பொதுமக்களும் பொருளு ணர்ந்து இன்புறத் தக்க பல பாடல்களும் அவற்றில் உள்ளன. " அப்பன் நீ அம்மை நீ அன்புடைய மாமனும் மாமியும் நீ " என்னும் முதலடியையுடைய நாவரசர்
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/112
Appearance