உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3Ա பார்வகிபாய் அகவலே ஏற்படுத்தினர். இவ்விதம் பலப்பல புரிந்தும் கைம்பெண்கொடுமை நீங்குவதாகத் தெரிய வாராமையால், அத்தகைய இளங் கைம்பெண்களுக்காக ஒர் இல்லம் நிறுவி அதில் அவர்களைச் சேர்த்து அவர்களுக்கு வேண்டிய கல்விமுறைகளைக் கற்பித்தால்அன்றி அக் கொடுமைகள் நீங்கா என்று கம் பெரியார் ஒருமுடி விற்கு வந்தார். பண்டிதை இரமாபாய்அம்மையாரால் ஏ ற்படுத்தப்பட்ட சாரதாசதனத்திலிருந்து வெளிவந்துவிட்ட வைதிகக்கைம்பெண்களுக்காக வேறு இல்லம் அமைத்தல் வேண்டுமெனப் பலரும் ஆரவாரம் செய்தனரே அன்றி அச்செயல் புரிய எவரும் முன்வரவில்லை. நம் பெரியார் கார்வே அவர்கள் அவ்விதம் ஒர் இல்லம், அமைக்க எண்ணி, அதற்கு ஆவன புரியத் தொடங்கி (60)Г. முதலில் நம் பெரியார் கைம்பெண்மறுமணக் கீழகத்தினர்சார்பில் அத்தகைய இல்லம் ஒன்றைத் தொடங்க எண்ணினர். அதன்பொருட்டு அக் கழகத்தினர் சிறிது பொருளும் சேர்க்கலாயினர். கைம்பெண் திருமணம் பலருக்கும் உடன்பா டன்ருகலின், அத்தகைய கழகத்தினர்சார்பில் இது தொடங்கப்பெறுமால்ை பொதுமக்கட்கு ஐயுறவு தோன்றும் என்னும் எண்ணத்தால் நம் பெரியார் அக் கருத்தினே மாற்றி, தாமே தம் பொறுப்பில் கைம்பெண் இல்லம் கடத்தத் தொடங்கினர். அக் கழகத்தினரும் அதற்கு உடன்பட்டுத் தம்மிடம் இருந்த சிறு தொகையினையும் கார்வே அவர்களிடம் கொடுத்துவிட்டனர்.