பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இன்றையத் திரையுலகக் கவிஞர்களிலே மருதகாசி ஒருவர். தாயைக் கொண்டு கண்ணனைக் கூப்பிடவைத்து, முத்தம் கேட்கவும் செய்கிறார் அவர். பான்மையுள்ள பாங்கு. நீலவண்ணன் கடவுள். “ஆழி மழைக்கண்ணன்” என்று அவனைப் பாடவில்லையா திருப்பாவை? அவன் வழியே தடம் பரப்பி நடக்கிறான் மனிதக் குழந்தை கண்ணன்.

உடனே வேறொரு பாடலை என் நெஞ்சம் இசைக்கக் கேட்கிறேன்.

பெண் குழந்தை ஒன்று. ஏழை வீட்டுச் செல்வம் அது. அதற்குப் பிறந்த நாள் விழா நடக்கிறது. விழா நடப்பதோ ஆஸ்பத்திரிச் சூழலில். மருந்து நெடி நமக்குப் பொருட்டல்லவே!

முத்தான முத்தல்லவோ !
முதிர்ந்து வந்த முத்தல்லவோ!
கட்டான மலரல்லவோ!
கடவுள் தந்த பொருளல்லவோ!...
சின்னஞ்சிறு சிறகு கொண்ட
சிங்காரச் சிட்டல்லவோ !
செம்மாதுளைப் பிளந்து
சிரித்து வரும் சிரிப்பல்லவோ !
மாவடுக் கண்ணல்லவோ !
மைனாவின் மொழியல்லவோ!
பூவின் மணமல்லவோ!

8