பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

உண்டு. ஒரு நாட்டின் முன்னேற்றம், வாழ்வு, வளப்பம் போன்ற பெருமைகள் அந்நாட்டினை முன்னின்று நடத்தும் தலைவரைப் பொறுத்தது. இந்த அளவில், நாம் பாக்கியசாலிகள். ஏனெனில், ‘ஆசிய ஜோதி’ யெனப் புகழப்படும் நேருஜியின் பொறுப்பு நிறைந்த தலைமை நமக்குக் கிடைத்திருக்கிறது. நாட்டுப்பற்று, நாட்டின் முன்னேற்றம், நாட்டுமக்களின் நல்வாழ்வு போன்றவற் றையே தம்முடைய தலையாய குறிக்கோள்களாகக் கைக்கொண்டு, அல்லும் பகலும் உழைத்து வரும் நேருஜியின் தவம் மூன்றாம் முறையிலும் பலித்துவிட்டது. இது நம் பேறு அன்றோ !

டில்லி லோகசபையில் 353 இடங்களும் தமிழ்நாடு சட்டசபையில் 138 இடங்களும் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ளன இதே வெற்றி நிலை, இந்திய நாட்டின் ஏனைய மாநிலங்களிலும் ஏற்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதிலும் ராஜ்ய சட்டசபைக்குக் கிடைத்துள்ள இடங்கள்: 1768, “உலக நாடுகளிலேயே மிகப் பெரிதாக மதிக்கப்படும் இந்தியப் பொதுத்தேர்தல், உயிருள்ள ஜன நாயகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு,” என்று அமரிக்கத் தலைவரின் ஆலோசகரான திரு செஸ்டர் பவல்ஸ் கூறியிருப்பதை காங்கிரஸ் மகாசபை மெய்ப்பித்துக் காட்டி விட்டது!

ஜன நாயக ஆட்சிமுறையில் கிடைத்த முதற் சாதனம், வாக்குரிமை. இவ்வுரிமைக்குச் சோதனையாக அமைவது தேர்தல். நாட்டில் நிலவுகின்ற பல்வேறு தரப்பட்ட, வெவ்வேறு மனப்பாங்கு பெற்ற கட்சிகள் போட்டியிடுவது மரபு, இம்மரபை ஒட்டி நடைபெறும் தேர்தலில் ஓட்டு வேட்டை நடத்த அந்தந்தக் கட்சியின் தலைவர்கள், அவரவர்களின் கொள்கை வழிப்படி சொல் மாரி பொழிவார்கள், எல்லாவற்றையும் - செவிசாய்த்து, பின்னர் சிந்தித்துச் சுதந்திரமாகச் செயற்படக் கடமைப் பட்ட பொதுமக்கள், தங்கள் கடமைவழி நின்று,