உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

பூவையின் சிறுகதைகள்


அன்றைக்குத்தான் 'பிட்டுக்கு மண் மண்டபப்படி விழா. அம்பலவாணன் செட்டியார் மரபு காத்து நடத்தும் இத்திருநாள் வைபவத்துக்கு விசேஷமாகக் கூட்டம் கூடுவது வழக்கம். மேளக் கச்சேரி, பிட்டு, சர்க்கரைப் பொங்கல், கடலைப் பருப்புச் சுண்டல், தாம்பூலம், தேங்காய் மூடி என்று அன்று தடபுடலாகவே உபயங்கள் எல்லாம் நடந்தேறும். "தெய்வம் தந்தது என்னோட சொத்து. அந்தத் தெய்வத்துக்கு விமரிசையாய் மண்டபப்படி செய்கிறதிலேதான் என்னோட மனச்சாட்சி அமைதி காணும்; அதுதான் என் மனசுக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும்; கொடுக்கவும் முடியும்" என்பார் செட்டியார்.

அப்படிப்பட்ட மெய்ப் பக்தரான அம்பலனவாணர் இல்லாமலேதான் அவர் மண்டபப்படி விசேஷம் நடைபெற வேண்டுமென்று விதித்துவிட்டதா என்ன?

நிரம்பி வழிந்த ஒளி வெள்ளத்திலே கூட்டம் நிரம்பி வழிந்தது.

ஒதுவார் ஏக்கம் தேங்க, சோகம் பாகமிட, மெய்யொடுங்கி, மெய் விதிர்த்துப் போய்விட்டார். அப்பனே ஏன் இப்படிச் சோதிச்சிட்டே? இதோ, தீபாராதனை நடக்கப் போகுதே! உன்னை அல்லும் பகலும் அனவரதமும் துதித்துக்கொண்டிருக்கப் பழகிவிட்ட அம்பலவாணன் செட்டியாரை மறந்திட்டியா? இல்லை, மறக்கப் போறியா? உன்னை மறக்காத அவரை நீ மறந்தால், மறக்க நேர்ந்தால் அது தருமமாகுமா, நியாயமாகுமா? சொல், அம்மையப்பா! நெஞ்சம் நெக்குருகியது; உருகிக் குலைந்தது; குலைந்து விம்மியது; விம்மி வெடித்தது.

திருப்புகழ் பாடிக் கொண்டிருக்கிறது நாகசுரம், 'அணித்த மறத் திருப்பொதுவில் விளங்கு நடத்தரசு க்கு இன்றைக்குப் பிட்டுக்கு மண் சுமந்த வேடம் புனை வடிவம். அதாவது, அவதாரம் பிட்டும் மண்ணும் கதை அல்லவே! -

பிட்டு விற்ற கிழவி வந்தியின் சார்பிலே, வைகைப் பெருவளத்தை அடைக்க அல்லது அடக்கச் சோமசுந்தரக் கடவுள் மண் சுமந்து, அரிமர்த்தன பாண்டியனிடம் பிரம்படிப்பட்ட திருவிளையாட்டை நினைவுறுத்தியும் நினைவு கூட்டியும் விளங்கும் அந்தக் கோலத்திற்கென்று அப்படியொரு மகிமை போலும்