பூவை எஸ். ஆறுமுகம்
4.
4
i
மண்வெட்டி, பிட்டுத் தட்டு, ஐந்தடுக்கு நாமுகத் தீபம் எல்லாமே வெள்ளிப் பொருள்கள்தாம்; வெள்ளியம்பலத்தே திருநடம் புரிந்த ஐயனுக்கு உகந்தவைதாம். இவை அனைத்தும் அம்பலவாணரின் பக்திச்சுவை சொட்டும் உபயங்களேயாம்.
ÉÉ
ஊம்! ஐயா, பூஜை ஆரம்பியுங்கள். மணி இப்போதே பத்தடிக்கப் போகுதுங்களே, ஒதுவார் ஐயா!"
உத்தரவு பிறந்தது.
ஒதுவாருக்குத் தி.கீரென்ற ஒர் அச்சஉணர்வு அச்சாரம் கொடுத்து உலுக்கி விட்டிருக்கவேண்டும். இமைகொட்டாமல், ஆனால் தேள் கொட்டின துடிப்போடு ஆண்டவனைப் பார்த்தார்; பார்த்துக்கொண்டே நின்றார். நெஞ்சிலும் நினைவிலும் நிழலாடிய அம்பலவாணன் செட்டியாரின் அன்பின் உருவம் மனக்கண்ணிலே ஆடியது கண்ட பாங்கிலே ஆடியது. ஏக்கமும் ஆர்வமும் தழலாகக் கொதிக்க, கைக்கு மெய்யான ஏமாற்றமும் சோகமும் சாட்டைப் பம்பரமாகச் சுழல, அவர் சுற்றுமுற்றும் பார்வையைச் செலுத்தினார். முடியவிழ்ந்த நரைமுடிக்கற்றைகள் வாடகை காற்றில் அசைந்தாட அலைந்தாட நுட்பமாகக் கண்டோட்டம் பதித்தார். அம்பலவாணன் செட்டியார் திடுதிப்பென்று இங்கே சுவாமியின் திருச்சபையின் சந்நிதியின் முன்னே வந்து குதித்துவிட மாட்டாரா? அம்புலிக்கு ஆசைப்படும் மழலையென அவர் மனப்பால் குடித்துவிட்டாரோ? மறு இமைப்பில், நெடு மூச்சுப் பிரிந்ததுதான் மிச்சம். மணியைக் கையில் ஏந்தினார்.
வில்வ இலைகள் சிந்தின, சிதறின. அம்பலவாணன் செட்டியாரின் ஜன்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தைச் சொல்லி அர்ச்சனையைத் தொடங்கினார் ஒதுவார்.
மேளச் சத்தம் முழங்கிற்று. நாதசுரம் வழிந்தது. கையெடுத்துக் கும்பிடவேண்டும். அதோ, தீபாராதனை நடக்கிறது.
தீபம் ஏந்திய ஒதுவாரின் அன்புக் கரங்கள் ஏன் அப்படி நடுங்குகின்றன? ஈசனே, எம்பிரானே! சோதனை கடந்தவன் ஆயிற்றே நீ? ஆனாலும் சோதனை நடத்திவிட்டாயே? உன் சித்தம் இந்த அற்பனுக்கு எப்படித் தெரியும், புரியும்? உன் விருப்பம் போல் நீ\, விளையாடு. அலகிலா விளையாட்டுடையவன் ஆயிற்றே நீ?