42
பூவையின் சிறுகதைகள்
அம்மையப்பா எங்கள் அம்பலவாணன் செட்டியாரை எங்கிருந்தாலும் நல்லபடியாகக் காப்பாற்றவாவது அருள்பாவிப்பாய் அல்லவா? இமை வட்டங்களிலே சுடுநீர் வட்டம் போட்டது.
ஆராதனை தொடர்ந்தது.
"ஹர ஹர மகாதேவா!'
கண்டாமணி ஒசையெனக் கணிரென்று முழுக்க மிட்டது பக்திச் சுவை குலுங்கிய புதிய குரலொன்று.
கூட்டம் ஏறிட்டு விழித்தது, அங்கே.
ஏக்கமும், உருக்கமும் மேலிடக் கைகுவித்து நின்றார் அந்த மொட்டைத் தலை ஆண்டிப் பண்டாரம்.
'எண்குணங்கள் பெற்ற அந்த ஆண்டவன் ஏன் அப்படிச் சிரிக்கிறான்? புதிர்ச் சிரிப்பல்லவா அது?
५१० 入$y ఎఫీడ x邻、 ※ ** אצל א:
ஆம், அம்பலதரசனின் அந்தப் புதிர்ச் சிரிப்புக்குத் தாராளமாகப் பொருள் இருக்கத்தான் இருக்க வேண்டும். அப்படியென்றால்?
அதோ, கோயிலின் வெளிப் புறத்துப் பந்தவிலே, கும்பலோடு கும்பலாகவும் தாடியும் மீசையும் எலும்பும் தோலுமாகவும், நின்றுகொண்டே, மேனி குலுங்கிட, கண்கள் குலுங்கிட, மனம் குலுங்கிட, பக்தி பரவசத்தோடு மெய்மறந்து, ஆனால் மெய்யை மறக்காமல் கைகூப்பிக் கும்பிட்டுக்கொண்டே இருக்கிறதே ஒர் உருவம், அந்த உருவத்தைப் பற்றறுத்துப் பாருங்கள்! -
"அப்பனே! நடராஜப் பெருமானே! உன்னோட அன்புக்கும் கருணைக்கும் ஈடேது. எடுப்பேது? நீ ஆட்டுவித்தாய். நான் ஆடாமல் தப்புவேனா? கண்காணாத சீமையிலே மண் சுமந்து, காசு சேர்த்து, வளமைப்படி உன் திருநாளை, என் மண்டபப்படியை, நல்ல தனமாகக் கொண்டாடக் கொடுத்து வச்சேனே! நான் பாக்கியவான்தான் என் மானத்தைக் கட்டிக் காத்தாயே அம்மையப்பா! உன் விளையாட்டை என்னவென்பேன்? நீ மண் சுமந்த பாவத்துக்கு ஒர் புது அர்த்தம் கொடுக்க வேண்டித்தான் நானும் மண்சுமந்த புண்ணியத்தைப் பெற்றேனோ? நீ புதிரல்லவே! நான்தான் புதிர் இல்லையானால்,