2& கரிப்பு மணிகள்
‘நீங்க போகப் போறியளா? துரத்துக்குடிக்கா?” ஒரு புதுமையுமில்லாத இந்தக் கிராமத்தை விட்டு நீங்கள் தூத்துக்குடிப் பட்டணத்துக்குப் போகப் போகி நீர்களா என்ற வியப்பில் இசக்கி கண்களை அகல விரிக் கிறாள்.
“பொறவு இங்க இனி என்ன சோலி அப்பச்சிக்கு ஒடம்பு முடியலியா, அப்ப நாம போயிப் பாக்கண்டா?”
‘மாமி அனுப்பிச்சிக் குடுப்பாவளா?”
“குடுக்காம குடுத்துத்தானே ஆவணும், நாங்க போயிடு வோம். பச்சையப்பய ன்ங்கேன்னு தெரியல. எங்க போனா? நீ பாத்தியர்?”
‘அதா, அந்தால ஜேம்சுகூடப் போனா...’
“பரவப் பிள்ளியகூடப் போய்த் தொலையிறா குடியம் பழகிக்குடுத்திடுவா. போட்டும் தூத்துக்குடிக்குப் போயிட் டா அங்கன இந்தச் சல்லிய மெல்லாம் இல்ல...’ என்று எண்ணிக் கொண்டு கடைக்காரரிடம் காபித்துாளும் கஞ்ப் பட்டியும் மாமி கூறியபடி கடனுக்குக் கேட்கிறாள்.
கடைக்காரன் கடனுக்குக் கொடுக்கத் தயாராக இல்லை. அவள் நேராக முன் சீஃப் ஐயா வீட்டுச் சந்து வழிச் சென்று பின்.முற்றத்தில் வந்து நிற்கிறாள்.
“ஆச்சி...’ என்று அவள் குரல் கொடுக்கையில் சந்து வழியாக உப்புப்பெட்டியும் கையுமாக வரும் தங்கபாண்டி ‘ஆரு பொன்னாச்சியா...?’ என்று கண்களை அகல விரிக் கிறான். அவள் தள்ளி நிற்கிறாள்.
“ஆச்சி இல்லையே? ஆறுமுவனேரி போயிருக்காவ காலமே சொல்லிட்டுப் போனாவ...’ என்று கொட்டிலில் உள்ள திண்ணையில் உப்புப் பெட்டியை அவள் வைக் கிறாள்.
ஆச்சிக்கு இப்ப என்ன...”
ஒரு விஷமச் சிரிப்பை தெணிய விட்டவாறு அவளை ஏற. இறங்க அவன் பார்க்கிறான்.