xiii எண்ணுயிரத்தாண்டு யோகம் இருக்கினும் கண்ணு ரமுதனக் கண்டறி வாரில்ல்ை உண்ணுடி உள்ளே ஒளிபெற நோக்கினற் கண்ணுடி போலக் கலந்துகின் ருனே ’ என்னும் திருமூலர் திருமந்திரச் செய்யுளை எடுத்துக் காட்டினர். அடியாரும் அதைக் கேட்டு ஆனந்தித்துத் தேவியின் எதிரில் கண்ணுடி ஒன்றை வாங்கி வைத்தார். திருமந்திரப் பாட்டும் அதன் கீழ் எழுதப்பட்டது. XI. ஆலயம் அமைத்தல் 1953-ம் ஆண்டில் பாகோ பாரத்தில் அன்னை வைஷ்ணவி. வீற்றிருந்தது ஒரு குடிலில் தான். அப்பொழுது தனிக் கோயில் அல்லது மண்டபம் ஒன்றும் இல்லை. அவற்றைக் கட்டும் எண் ணமோ அல்லது அதற்கான முயற்சியோ இருந்ததில்லை. முகிவர் கள் தவம்புரியும் பர்ணசாலையைப் போல் எளிமையுடன் அக்குடில் காட்சி யளித்துவந்தது. மரச் சட்டங்களால் பின்னப் பட்ட வலை sGen (wooden lattice work) off sold Hspissfléo esol_ju. பிறகு, தேவியே தனது ஆலயத்தை ஈடு இணையில்லாத பொலிவுடன் சிறப்பாக அமைத்துக் கொள்ள உளங் கொண்டாள் போலும், சற்றும் எதிர்பாராத வகையில் செட்டி நாட்டில், ஆலயங்களுக்கே உதவும் படியானதும், சிறந்த சித்திர வேலைப்பாடுடன் கூடியதும், சுமார் 10 அடி உயரம் உள்ளதுமான வேங்கை மரத்தால் செய்யப் பட்ட வாசற்கால் ஒன்று விற்பனைக்கு வந்தது. அன்பர் அதை 1954-ஆம் வருஷம் வாங்கியிருந்தார். பிறகுதான் மண்டபம் கட்ட வேண்டுமென்ற எண்ணம் உதித்தது. வாசற்கால் மிகப் பெரிய அளவில் இருந்ததால் கூடமும் அதற்கேற்ற பெரிய அளவிலேயே அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மண்டபம் நிறுவும் பணி 6-12-1956-இல் துவக்கப்பட்டது. 1-3-1957-இல் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது; பின்பு கோயிலைக் கட்டும் வேலை பிப்ரவரி-58-இல் துவக்கப்பட்டது. கோயிலை அமைத்துக் கொண்ட் தேவி மேலும் மேலும் பெருகி வ்யாபிக்க உளங் கொண்டனள்.
பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/25
Appearance