xi நடந்து விடுமோ என்று சந்தேகம் உதித்தது; நண்பரது மோட்டார் காரை வெகு ஆவலுடன் எதிர்பார்த்தனர். 19.10.1957 சனிக்கிழமை மாலை குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு மணி தாமதமாகவே கார் வந்தது. உடனே எல்லோரும் புறப் பட்டனர். காஞ்சியை நோக்கிக் கார் விரைந்தது. வழியில் எங்கும் சிற்றுண்டிக்குக்கூடத் தங்கவில்லை. நேரே காமாட்சி கோயிலை அடைந்தனர். பூர அபிஷேகம் ஆரம்பித்து விட்டதாகவும் அறிந்தனர். ஆடையைக்கூட மாற்ருமலும் கையில் பழம், புஷ்பம் ஒன்றுமில்லாமலும் சங்கிதிக்கு ஓடினர்கள். கங்கா தீர்த்தம் மட்டும்தான் உடன் வைத்திருந்தனர். சந்நிதியை அடைந்து அபிஷேகம் நடந்து கொண்டிருந்ததைக் கண்குளிரக் கண்டனர். ஆனந்தித்தனர். என்னே அன்னையின் கருணை ! ஐப்பசி பூரம் 20-10-57 ஞாயிற்றுக்கிழமை என்று அவர்கள் ஒரு பஞ்சாங்கப்படிச் செய்த தப்புத் தீர்மானத்தைத் திருத்தி முதல் காளாம் சனிக்கிழமை அன்றே அபிஷேகத்திற்கு அழைத்துக் கொண்டாளே அன்னை. அன்னையின் அளவிடா அன்பு ஆனந்தத்தை அளித்தது. ஆனல் பூர நக்ஷத்திரத்தின் முழுவிவரம் விளங்கியபாடில்லை. அன்னையின் அருட்ப்ரவாகம் அடுத்த வாரமே அவ்விவரத்தையும் தெளிவுறவைத்தது. தணிகேசன் பக்தரும், தமிழ்ப்புலவருமான ரீ வ. சு. செங்கல்வ. ராய பிள்ளை அவர்கள் வைஷ்ணவி கோயிலுக்கு வந்தார். பக்தர் அவரிடம் நடந்த விருத்தாந்தங்களைச் சொன்னர். உடனே பிள்ளை அவர்கள் கந்தரக்தாதியில் ஒரு பாட்டைச் சொல்லி அதில் அருண கிரிநாதர் “ பார்வதியின் நகூடித்திரம் பூரம்' என்பதாகச் சொல்லி யிருப்பதைக் காட்டினர். அப்பாடல் வருமாறு : திரி*புரத் தப்புப் புவிதரத் தோன்றிச் சிலைபிடிப்பத் திரிபுரத் தப்புத் தலைப்பட நாண்டொடுஞ் சேவகன்கோத் திரிபுரத் தப்புத் திரமான் மருக திருக்கையம்போ * - திரிபுரத் தப்புத் துறையா யுதவெனச் செப்புநெஞ்சே." -(கந்தரந்தாதி-78.)
- புரத்து=பூரநாளில், அப்புப்புவி=கடல் சூழ்ந்த உலகை T = பெற்றருள, தோன்றி=அவதரித்த உமாதேவி. தா =