பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X நான்கு மாதங்கள் கழித்து, அன்பரே நேரில் காஞ்சி சென்று ஜகத் குருவைத் தரிசனம் செய்தார். நமஸ்கரித்தவுடன் அன்பர் ஏதும் கேட்பதற்கு முன்னரே கருத்தறிந்து முடிப்பான் இறைவன் போல் 'ஆடிப் பூரம் ஆண்டாள் பிறந்த நன்ள்ை. அரிய சக்தி பிறந்த தினம் எல்லா ஹிந்துக்களுக்குமே புகித தினமன்ருே சைவ, வைஷ்ணவ பேதமில்லாத ஆதி காலத்தில் அந்த அரிய சக்தி பிறந்த ஆடிப் பூரத்தைச் சிவன் கோயில்களிலும், விஷ்ணு கோயில் களிலும் கொண்டாடினர்கள். அந்த ஆதிகால வழக்கம் இன்னும் தொடர்ந்து வருகிறது ' என்று அருள்வாக்காக மொழிந்தார். ஜகத் குருவின் திருவருளால் ஆடிப் பூரத்தின் விசேஷம் அன்பருக்கு விளங்கியது. ஆனல் மற்ற பூரங்களின் முக்யத்வம் பின்னும் விளங்கவில்லை. ஜகத் குரு தரிசனம் முடிந்ததும் நேரே காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்ருர். அர்த்த ஜாம தீபாராதனை நடந்து கொண்டிருந்தது. ஹாரத்தி பிரசாதம் கொடுக் கும் பொழுது குருக்கள் தாமாகவே அன்பரிடம் காமாட்சி தேவி ஐப்பசி மீ பூர நக்ஷத்ரத்தன்று பிலத்வாரததிலிருந்து வெளி வந்தாள். அத்தினம் கோயிலில் விசேஷமாகக் கொண்டாடப்படு கின்றது' என்று தெரிவிததார். - அன்பர் பரவசமானர். காம கோடி பீடத்தலைவி அன்னை காமாட்சியே கருணை கூர்ந்து குருக்கள் மூலம் தனது ஐயத்தை நீக்க அருளிய வாக்கு என நினைந்து உருகி, ஐப்பசிப் பூரத்தன்று காமாட்சி தேவியைத் தரிசனம் செய்வதாகத் தீர்மானித்தார். சென்னை வந்தபின், அன்பரும் உடன் வசித்தவரும் பக்தரும் பஞ்சாங்கப்படி 1957 u அக்டோபர் மீ 20வ ஞாயிற்றுக்கிழமை ஐப்பசிப் பூரம் என்று கண்டு அந்நாளை வெகு ஆவலுடன் எதிர் பார்த்திருந்தனர். வேருெரு நண்பர் தன் காரில் இருவரையும் அழைத்துப் போவ தாகவும், முதல்நாள் சனிக்கிழம்ை மாலை போய் மற்ற கோயில்களைத் தரிசித்து, மறுநாள் பூர அபிஷேக தரிசனம் செய்துவிட்டு வருவ தாகவும் ஏற்பாடு செய்தனர். சனிக்கிழமை காலைமுதல் பக்தருக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஒருக்கால் இன்றைக்கே பூர அபிஷேகம்